பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2025 திருக்குறள் பால் : பொருட்பால் இயல் :குடியியல் அதிகாரம்: உழவு குறள் எண்: 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து, பொருள் : உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும். பழமொழி : சுறுசுறுப்பு வெற்றி தரும். Briskness will bring success. இரண்டொழுக்க பண்புகள் : *வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். * பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன். பொன்மொழி : நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ விழும் போது உன்னை சுமக்கும். பொது அறிவு : 1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? விடை : தந்தை பெரியார். ...