திருக்குறள்
அதிகாரம் 100 –
பண்புடைமை
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
பழமொழி
- அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
- அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.
* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.
பொன்மொழி :
நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ விழும் போது உன்னை சுமக்கும்.
பொது அறிவு :
1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்?
விடை: தந்தை பெரியார்.
2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது?
விடை: கீழாநெல்லி
English words & meanings :
Bride. - மணமகள்
Candle. - மெழுகுவர்த்தி
வேளாண்மையும் வாழ்வும் :
நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்
நீதிக்கதை
இன்றைய செய்திகள் - 02.06.2025