Songs

Friday, January 17, 2025

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் - அரசாணை G.O.Ms. No. 8, Dated : 03-01-2025 வெளியீடு


Please click 


களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் - அரசாணை G.O.Ms. No. 8, Dated : 03-01-2025 வெளியீடு

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத்துறை - தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ₹6.00 லட்சத்திற்கு (ஆறு லட்சம்) செயலாளரின் விருப்ப நிதியைப் பயன்படுத்தி - உத்தரவுகள் - வெளியிடப்பட்டது.

பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு

 




ள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; 

சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு


தமிழக அரசு பள்ளிகளில், மன்ற செயல்பாடுகளாக, மாதத்துக்கு ஒரு சிறார் சினிமா திரையிடப்படுகிறது. அதிகபட்சம், 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய படங்களை, தலைமை ஆசிரியர்கள், மாலை வேளையில் திரையிடுகின்றனர்.


இந்நிலையில் ஜனவரியில், பள்ளிகளில் சினிமா திரையிடப்படும் விதம் குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 'டீரிம் ஆப் ட்ரீ' எனும், 33 நிமிடம் ஓடக்கூடிய சிறார் சினிமா, 'எமிஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் திரையிடும்போது, சிறப்பு அழைப்பாளர் வரவழைக்கப்பட்டு, ஒளிபரப்பு முடிந்த பின், சினிமா குறித்த விமர்சனம், கருத்து, மாணவ, மாணவியரின் விமர்சனம் என, 2:30 மணி நேரத்துக்கு கூட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, January 16, 2025

மணற்கேணி செயலி.... link

Please click 



அரசுப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி என்ற செயலி வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.


இதையடுத்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் செல்போன், மடிக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போர்டு, கணினி ஆய்வகத்தில் மணற்கேணி செயலி அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதளத்தில் காணொலிக் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இதுதவிர அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கணினியுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பிப்ரவரி முதல் நடைபெற வேண்டும். மணற்கேணி செயலி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ள காணொலிகள் வகுப்பறை செயல்பாட்டில் தொடர்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி மாத திரைப்படம் - மரங்களின் கனவு



Please click 

Monday, January 13, 2025

மணற்கேணி - காணொளிகளின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக ஒன்று முதல் எட்டு வரை






மணற்கேணி செயலியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பதிவேற்றப்பட்டிருக்கும் காணொளிகளின் எண்ணிக்கை பாடவாரியாக


Please click this link



நேரடியாக செயலிக்குள் செல்ல இங்கே கிளிக் செய்க 

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis

Kalanjiyam App - RH விடுப்பு APPLY செய்யும் வழிமுறை.. Kalanjiyam App - RH விடுப்பு APPLY செய்யும் வழிமுறை..

 Kalanjiyam App - RH விடுப்பு APPLY செய்யும் வழிமுறை..

Sunday, January 12, 2025

13-01-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் :    நட்பு ஆராய்தல்

குறள் எண்: 800


மருவுக மாசற்றார் கேண்மை;ஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.


பொருள்: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.


பழமொழி :

A man of course never wants weapons


 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.


இரண்டொழுக்க பண்புகள் :  


* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  


* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :


செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.


பொது அறிவு 


1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.


விடை: 15 ஆண்டுகள்


2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?


விடை: பாரதிதாசன்


English words & meanings :


 Cup-கோப்பை,


Glass-கண்ணாடி


வேளாண்மையும் வாழ்வும் : 


மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.



போகிப் பண்டிகை -கவிதை

பழையன கழித்து புதியதை அணிந்தெடுக்கும்,


போகி தீயில் கனவுகள் பொங்கி எழும்.
காற்றின் புயலில் புகைசல் மிதக்கும்,


உயிர்க்கும் பூமிக்கும் புதுமை கிடைக்கும்.


சிறிய தீயினில் செறிந்த உறவுகள்,


புத்தாண்டின் முதல் நிமிட நெஞ்சகங்கள்!

நீதிக்கதை: உண்மையின் விலை

ஒரு கிராமத்தில் சிவா என்ற உழைப்பான விவசாயி இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நாள் அவரின் வயலின் பக்கத்திலிருந்து ஒரு பெரிய பொருளின் பளிங்கு அசைவைக் கண்டார். அது ஒரு பொன்னான நகைத் தொகுப்பாக இருந்தது.

சிவா அதை வீட்டிற்கு கொண்டு போகவில்லை. பதில், அதை சொந்தக்காரரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று எண்ணினார். அவரால் அந்த நகையை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அவர் கிராம மன்றத்துக்குச் சென்றார்.

மன்றத்தில் அந்த நகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த நாளே அதன் சொந்தக்காரர் ஒரு வணிகர் என தெரியவந்தது. அவர் சிவாவின் நேர்மையைப் பார்த்து மெய்சிலிர்ந்தார். நன்றி சொல்லி, அந்த நகையின் அரை மதிப்பை பரிசாக கொடுத்தார்.

கதையின் நீதிமுறை:
நேர்மை எப்போதும் நன்மையைக் கொண்டு வரும். மனிதனின் உண்மையான செல்வம், அவனுடைய நேர்மை மற்றும் நெறிமுறையில்தான் இருக்கிறது.

முக்கிய செய்திகள் 


🗞️ பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக, போகி கொண்டாடும் பொதுமக்கள். சென்னையில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியும், மேளம் கொட்டியும் உற்சாகம்.


🗞️ பொங்கல் கொண்டாட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை புறநகர் சாலைகளில் 3-ஆவது நாளாக அலைமோதிய பயணிகள் கூட்டம்.


🗞️ சென்னையில் 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு 20 லட்சம் பேர் வருகை.. 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாக பபாசி அமைப்பு அறிவிப்பு.


முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாக குறைக்கப்பட்டு, அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை தகவல்.

* போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.6.41 கோடி ஊக்கத் தொகை வழங்க அரசாணை.

* உடல் உறுப்பு தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு: மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு.

* தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: நார்வேயின் கேஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷூட் - அவுட்டில் சூர்மா கிளப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி.

Today's Headlines

To welcome Pongal, the public celebrates with pooja. In Chennai, old things are set on fire and drums are played in excitement.


🗞️ As the Pongal celebrations are about to begin tomorrow, people are rushing to their hometowns. The crowded traffic at the Glampakkam bus stand and Chennai suburban roads for the 3rd day.


🗞️ 2 million people visited the 17-day book fair in Chennai.. The Babasi organization announced that books worth Rs. 20 crore were sold.


The 10 percent internal reservation given to secondary teachers in the appointment of postgraduate teachers has been reduced to 8 percent, and 2 percent internal reservation has been given to ministry employees: School Education Department information.

* Government order to provide an incentive of Rs. 6.41 crore to the employees of transport corporation .

* 42-day special leave for central government employees who donate organs: Union Health Ministry announcement.

* Firefighters have said that water shortage and power outages are also reasons for the inability to control the Los Angeles forest fire.

* Australian Open Tennis Series: Norway's Casper Root advances to the 2nd round.

* Hockey India League: Hyderabad defeats Surma Club in shoot-out

Saturday, January 11, 2025

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இனி தாளாளர்கள் ஊதியம் பெற்று வழங்க அதிகாரம்

https://drive.google.com/file/d/1PcH8MjN_JzCdaB3s2Fl1Gpvb-z5Arqrh/view?usp=drivesdk 


Click above link 


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி தாளாளர்கள்/ செயலாளர்கள்/ நிர்வாகிகள்.


*ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற  முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


*அதற்கான தாங்கள் உடனடியாக DSC விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்*.


*முதல் கட்டமாக தாளாளரே DDO ஆக 1-3-2025 முதல் செயல்படுவார்

களஞ்சியம் appல் update...

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam 

Thursday, January 9, 2025

10-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:799


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்.


பொருள்:கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.


பழமொழி :

A bad day never hath a good night.


 முதல் கோணல் முற்றும் கோணல்.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. 


பொது அறிவு : 


1. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?


விடை: ரஷ்யா 


 2. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?


விடை: தாய்லாந்து 


English words & meanings :


 Daft – silly; foolish.

 குழந்தைத்தனமான,முட்டாள்தனமான. 


Dairy - a place on a farm where milk is kept and butter, cheese, etc. are made..பால் பண்ணை


வேளாண்மையும் வாழ்வும் : 


வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். அந்த அளவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. 



10-01-25 இன்று 


 உலகின் மிகப் பழமையான சுரங்க தொடர்ந்து பாதை லண்டனில் (1863) திறக்கப்பட்டது.  


முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர  வெர்சாய் ஒப்பந்தம் (1920)  கையெழுத்திடப்பட்டது.  


நினைவு தினம்


தற்கால சூழலியலின் முன்னோடியான கரோலஸ் லின்னேயஸ் (1778), 


மண்இந்தியாவின் பெப்பீசு மற்றும் நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கம் பிள்ளை (1761) ஆகியோரின்  நினைவு தினம். 


பிறந்த தினங்கள்


இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான முதுபெரும் காங்கிரஸ் தலைவர் காளியண்ணன் (1921), 


புகழ் பெற்ற பின்னணி திரைப்பட இசை பாடகர்  பத்ம விபூஷன் முனைவர் கே. ஜே. இயேசுதாஸ் (1940), 


 பிரபல பஞ்சாப் இலக்கியவாதி  பத்ம ஸ்ரீ. குருதையாள் சிங் (1933) ஆகியோரின் பிறந்த தினம்.


நீதிக் கதை: 

"அறிவும் அகநாணமும்"

ஒரு கிராமத்தில் ராமு என்ற ஒருவன் வாழ்ந்தான். அவன் மிகவும் சாமர்த்தியமானவனாக இருந்தாலும், எளிமையாக ஆட்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்வாகக் கொண்டிருந்தான்.

ஒருநாள், அவன் மற்றொரு கிராமத்தில் சென்று, தங்க மாலையைப் போலவே தோற்றமளிக்கும் கம்பியை மாலையாக மாற்றி விற்றான். அவனிடம் மாலை வாங்கிய சிலர் அதை உண்மையான தங்கம் என்று நம்பி வாங்கினார்கள்.

அந்தக் கம்பி மாலையை வாங்கியவர் வீட்டுக்குச் சென்று தன் மனைவியிடம் பெருமையாக காட்டினார். ஆனால், அவருடைய மனைவி அதைத் தீயில் வைத்து சுத்தம் செய்ய முயன்றபோது, மாலை உருகி கம்பியாக மாறியது. உண்மையை அறிந்த அவர், மிகவும் கோபமடைந்து, கிராம தலைவரிடம் புகார் செய்தார்.

கிராமத்தலைவர், ராமுவை அழைத்து விசாரிக்க, அவன் தனது அறிவாற்றலால் தனது தவறை மறைக்க முயன்றான். ஆனால், தலைவரின் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ராமு தனது தவறை ஒப்புக் கொண்டான்.

தலைவர் ராமுவிடம், "அறிவு உனக்குண்டு. ஆனால், அதை நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும். தவறான வழியில் சென்றால், அது உன்னை கீழே தள்ளிவிடும். ஆட்களுக்குச் சதி செய்வதை விட்டுவிடு," என்று அறிவுரை கூறினார்.

நீதிசாரம்:

அறிவுடன் அகநாணமும் இணைந்தால் மட்டுமே அது நன்மையை தரும். சதி செய்து சம்பாதிப்பது தற்காலிகமானது; நேர்மையால் மட்டுமே நிலையான வெற்றியை அடையலாம்.


முக்கிய  செய்திகள்* 📺


நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட வலியுறுத்தல்


🗞️ யுஜிசி-யின் புதிய விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்; அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு, பாஜக வெளிநடப்பு!



🗞️ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 3 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பதால், மாநகராட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள்!


🗞️ இன்று முதல் 4 நாட்களுக்கு பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்திற்கு இணைப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு!


🗞️ ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; L&T நிறுவனத் தலைவரின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்!


* Headlines* 📺


An appeal to celebrate the centenary of government schools that have passed one hundred years of existence.


🗞️ The Chief Minister's special resolution against the new rules of the UGC was unanimously passed; Parties including AIADMK, PMK support, BJP walks out!



🗞️ Filing of nominations for the Erode East by-election begins today; As the petition can be filed for only 3 days, elaborate arrangements have been made at the Corporation office!


🗞️ Pongal special buses to operate for 4 days from today; Arrangements for connecting buses from various parts of Chennai to Koyambedu, Kalampakkam, and Madhavaram!


🗞️ Employees should work 90 hours a week; L&T chairman's speech strongly condemned on social media!


02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...