பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் : நட்பு ஆராய்தல்
குறள் எண்: 800
மருவுக மாசற்றார் கேண்மை;ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
பொருள்: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.
பழமொழி :
A man of course never wants weapons
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.
* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.
பொன்மொழி :
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.
பொது அறிவு :
1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
விடை: 15 ஆண்டுகள்
2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
விடை: பாரதிதாசன்
English words & meanings :
Cup-கோப்பை,
Glass-கண்ணாடி
வேளாண்மையும் வாழ்வும் :
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.
போகிப் பண்டிகை -கவிதை
பழையன கழித்து புதியதை அணிந்தெடுக்கும்,
போகி தீயில் கனவுகள் பொங்கி எழும்.
காற்றின் புயலில் புகைசல் மிதக்கும்,
உயிர்க்கும் பூமிக்கும் புதுமை கிடைக்கும்.
சிறிய தீயினில் செறிந்த உறவுகள்,
புத்தாண்டின் முதல் நிமிட நெஞ்சகங்கள்!
நீதிக்கதை: உண்மையின் விலை
ஒரு கிராமத்தில் சிவா என்ற உழைப்பான விவசாயி இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நாள் அவரின் வயலின் பக்கத்திலிருந்து ஒரு பெரிய பொருளின் பளிங்கு அசைவைக் கண்டார். அது ஒரு பொன்னான நகைத் தொகுப்பாக இருந்தது.
சிவா அதை வீட்டிற்கு கொண்டு போகவில்லை. பதில், அதை சொந்தக்காரரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று எண்ணினார். அவரால் அந்த நகையை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அவர் கிராம மன்றத்துக்குச் சென்றார்.
மன்றத்தில் அந்த நகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த நாளே அதன் சொந்தக்காரர் ஒரு வணிகர் என தெரியவந்தது. அவர் சிவாவின் நேர்மையைப் பார்த்து மெய்சிலிர்ந்தார். நன்றி சொல்லி, அந்த நகையின் அரை மதிப்பை பரிசாக கொடுத்தார்.
கதையின் நீதிமுறை:
நேர்மை எப்போதும் நன்மையைக் கொண்டு வரும். மனிதனின் உண்மையான செல்வம், அவனுடைய நேர்மை மற்றும் நெறிமுறையில்தான் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
🗞️ பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக, போகி கொண்டாடும் பொதுமக்கள். சென்னையில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியும், மேளம் கொட்டியும் உற்சாகம்.
🗞️ பொங்கல் கொண்டாட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை புறநகர் சாலைகளில் 3-ஆவது நாளாக அலைமோதிய பயணிகள் கூட்டம்.
🗞️ சென்னையில் 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு 20 லட்சம் பேர் வருகை.. 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாக பபாசி அமைப்பு அறிவிப்பு.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத உள்ஒதுக்கீடு 8 சதவீதமாக குறைக்கப்பட்டு, அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை தகவல்.
* போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.6.41 கோடி ஊக்கத் தொகை வழங்க அரசாணை.
* உடல் உறுப்பு தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு: மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு.
* தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: நார்வேயின் கேஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷூட் - அவுட்டில் சூர்மா கிளப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி.
Today's Headlines
To welcome Pongal, the public celebrates with pooja. In Chennai, old things are set on fire and drums are played in excitement.
🗞️ As the Pongal celebrations are about to begin tomorrow, people are rushing to their hometowns. The crowded traffic at the Glampakkam bus stand and Chennai suburban roads for the 3rd day.
🗞️ 2 million people visited the 17-day book fair in Chennai.. The Babasi organization announced that books worth Rs. 20 crore were sold.
The 10 percent internal reservation given to secondary teachers in the appointment of postgraduate teachers has been reduced to 8 percent, and 2 percent internal reservation has been given to ministry employees: School Education Department information.
* Government order to provide an incentive of Rs. 6.41 crore to the employees of transport corporation .
* 42-day special leave for central government employees who donate organs: Union Health Ministry announcement.
* Firefighters have said that water shortage and power outages are also reasons for the inability to control the Los Angeles forest fire.
* Australian Open Tennis Series: Norway's Casper Root advances to the 2nd round.
* Hockey India League: Hyderabad defeats Surma Club in shoot-out