பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் குடிமை
குறள் எண்:957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண மறுப்போல் உயர்ந்து.
பொருள்: விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.
பழமொழி :
செய்வன திருந்தச் செய்.
Do well what you have to do.
இரண்டொழுக்க பண்புகள் :
*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.
*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும்--அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?
விடை: நெருஞ்சிப் பழம்.
2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________
விடை: அனிச்சம் , குவளை
English words & meanings :
Dam. - அணை
Desert. - பாலைவனம்
வேளாண்மையும் வாழ்வும் :
பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.
நீதிக்கதை
கிணற்றைத்தானே விற்றேன்
ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.
அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.
விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.
விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.
நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால்கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.
விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
இன்றைய செய்திகள் - 25.03.2025
* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.
* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.
* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan
* Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.
* Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.
* The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.
* Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.
* Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round