Songs

Saturday, May 31, 2025

02-06-2025 பள்ளி காலை நேர வழிபாட்டுச் செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025

திருக்குறள்

அதிகாரம் 100 – 

பண்புடைமை

 குறள் 991:

 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 

பண்புடைமை என்னும் வழக்கு 

 பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர். 


பழமொழி

  • அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
  • அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.



இரண்டொழுக்க பண்புகள் :


*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 


* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :


நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.


பொது அறிவு : 


1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? 


விடை: தந்தை பெரியார்.        


2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது? 


விடை: கீழாநெல்லி


English words & meanings :


 Bride.    -     மணமகள்


Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் : 


நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்



நீதிக்கதை




இன்றைய செய்திகள் - 02.06.2025



Thursday, April 17, 2025

17-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 இயல் :குடியியல்

 அதிகாரம்: உழவு


 குறள் எண்: 1032

 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

 எழுவாரை எல்லாம் பொறுத்து,


பொருள்:

உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.


பழமொழி :

சுறுசுறுப்பு வெற்றி தரும்.


Briskness will bring success.


இரண்டொழுக்க பண்புகள் :


*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 


* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.


பொன்மொழி :


நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.


பொது அறிவு : 


1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? 


விடை: தந்தை பெரியார்.        


2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது? 


விடை: கீழாநெல்லி


English words & meanings :


 Bride.    -     மணமகள்


Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் : 


நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்



நீதிக்கதை


 நரித் தந்திரம்!


ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டது. எல்லா மிருகங்களும் வந்தன.


முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டது.


‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’என்று கேட்டது.


குரங்கு வந்து முகர்ந்து பார்த்து விட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’என்றது.


சிங்கத்துக்கு கோபம் வந்து விட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. குரங்கு சுருண்டு விழுந்துவிட்டது.


அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ என்றது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டே வந்தது.


சிங்கத்தை முகர்ந்து பார்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ என்றது. "பொய்யா சொல்றே?ன்னு சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் சுருண்டு விழுந்தது.


அடுத்த படியாக ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ என்றது சிங்கம்.


 நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக் கொண்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது. அப்புறம் கூறியது, ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’


 நரி தன் தந்திரமான குணத்தாலும், சமயோசித புத்தியாலும் தப்பித்தது



இன்றைய செய்திகள் - 17.04.2025


* அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்.


* 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா.


* இந்திய ஓபன் தடகளம் 2025: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்.


* பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Secretary of the Tamil Development and News Department has ordered all government department secretaries to issue government orders only in Tamil from now on.


 * The Meteorological Department has reported that the temperature will increase in Tamil Nadu for the next three days starting tomorrow. The public is advised to be cautious regarding the heatwave.

 

* The Supreme Court has issued a strict order stating that the license of the concerned hospital must be canceled if a newborn child goes missing.


 * China has issued 85,000 visas to Indians in the four months from January to April 2025. This is seen as a significant move in the relationship between the two countries.

.

 * Indian Open Athletics: Yash Veer Singh has won the gold medal in the javelin throw event at the Indian Open Athletics Championships.


 * Barcelona Open Tennis: Danish player Holger Rune has advanced to the quarterfinals of the Barcelona Open Tennis tournament. He is displaying excellent performance



Wednesday, April 16, 2025

16-04-25 காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


திருக்குறள்: 


பால்: பொருட்பால்

 இயல்: குடியியல்

 அதிகாரம்: உழவு

 குறள் எண்:1031

 சூழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
 உழந்தும் உழவே தலை.

பொருள்:
மக்கள் பலதொழில் வளங்களில் சிறந்திருந்தாலும் உணவிற்காக உழவை நாடுவர். எனவே உழவே முதன்மையானது.

பழமொழி :

Whatever is worth doing, is worth doing well.


செய்ய வேண்டியதைச் சரியாக செய்.

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

மொழி  மனிதனுக்கு  விழி  போன்றது.---கலைஞர்

பொது அறிவு : 

1. குழந்தை உதவி எண் எது? 

விடை: 1098.      

2. மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 

விடை: தாமிரபரணி

English words & meanings :

 Anniversary.   -     ஆண்டுவிழா 

Birthday     -      பிறந்த நாள்

வேளாண்மையும் வாழ்வும் : 

 அறுவடை செய்து வடிகட்டிய மழைநீரை கழிப்பறை, வீட்டுத்தோட்டம், புல்வெளிப் பாசனம், சிறு விவசாயம் போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

 கொக்குவுக்கு எத்தனை கால்?


பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.


“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.


சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.


“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.


சாப்பாட்டு நேரம்—

முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.


நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.


மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.


“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.


முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.


ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவிப் பின் பறந்து சென்றன.


“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.


மேலும், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.


“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

இன்றைய செய்திகள்

16.04.2025

* மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

* இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர்.

* அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர்.

* மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: வீரர்-வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு.
Today's Headlines

* Chief Minister M.K. Stalin has announced in the Tamil Nadu Legislative Assembly that a high-level committee headed by retired Justice Kurian Joseph will be formed to protect the rights of the state.
 
 * The Tamil Nadu Health Department has issued a government order to establish the Kalaignar Centenary Integrated Research Foundation to promote medical research and new discoveries.
 
* Authorities are taking action to deport 15 foreigners who were staying illegally in India.
 
 * The Chinese government has stopped the export of minerals, metals, and magnetic materials to the United States. This has created a risk of impacting military equipment production in America.
 
* An all-female celebrity crew has traveled to and returned from space via Jeff Bezos's space company, Blue Origin.
 
 * New rankings for male and female players have been released following the conclusion of the Monte Carlo Tennis Tournament.
 
* The Indian squad for the women's hockey series against Australia has been announced.





02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...