பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
நாள்: 10-12-24
இன்று
நோபல் பரிசு தினம். நோபல் பரிசை உருவாக்கிய அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு நாள்
சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்.
மனித உரிமைகள் தினம்.
இந்திய இயற்பியலாளரான மதன்லால் மேத்தா (2006), இந்திய பொறியியல் அறிஞரும் கல்வியாளருமான வா.செ. குழந்தைசாமி (2016) ஆகியோரின் நினைவு தினம்.
சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், இந்தியாவின்
கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதலமைச்சர் என பன்முகம் கொண்ட மூதறிஞர் ராஜாஜி (1878) பிறந்த தினம்.
திருக்குறள்
பால்:பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: கல்வி
குறள் எண்: 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
விளக்கம்
‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள்.
பழமொழி
Empty vessels Mac the greatest nice
குறைகுடம் கூத்தாடும்
இரண்டொழுக்க பண்புகள்
1.ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.
2.முயன்றால் பட்டாம்பூச்சி முயலா விட்டால் கம்பளிப் பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்
பொன்மொழி
ஏழைகள் உணவை தேடுகிறார்கள் செல்வந்தர்கள் பசியை தேடுகிறார்கள்
-கிரீஸ் நாட்டு பழமொழி
பொது அறிவு
- நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? ஒடிசா
- ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ? கனடா
English words & meanings :
Escalator - மின் படிக்கட்டு
E Magazine - மின் இதழ்கள்
கணினி கலைச்சொற்கள்
Central processing unit (CPU)-மைய செயலகம்
Control unit-கட்டுப்பாட்டகம்
இலக்கணம் (Grammer)
Simple present tense
S+V+O
I ate an apple- ஆப்பிள் சாப்பிட்டேன்
I eat an apple-நான் ஆப்பிள் சாப்பிடுகிறேன்
I shall eat an apple-நான் ஆப்பிள் சாப்பிடுவேன்
விவசாயம் -உணவு
வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி, சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்
நீதி கதை
**பால் விற்பனையாளர் மற்றும் பாலத்தில் கலந்த தண்ணீர்**
ஒரு கிராமத்தில் ஒரு பால் விற்பனையாளர் இருந்தான். அவன் பாலை விற்கும் போது, அதில் தண்ணீர் கலந்துவிற்கும் பழக்கமுடையவன். இந்த நகைச்சுவையால், அவன் நல்ல லாபம் சம்பாதித்தான்.
ஒரு நாள், அவன் அதேபோல தண்ணீர் கலந்த பாலை விற்று வந்த பணத்தை பையில் வைத்து ஆற்றை கடந்தான். அப்போது, பைகள் காற்றில் கலைந்து, அவனுடைய பணம் ஆற்றில் விழுந்து போய்விட்டது.
அவன் சோகத்துடன் கண்களை மூடி, நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினான். அப்போது ஒரு குரல் கேட்டது:
**"நீ பாலில் தண்ணீர் கலந்தது போல, உன் பணமும் தண்ணீரில் கலந்துவிட்டது. நீ தர்மமாக இருந்தால் இத்தகைய அநியாயம் உனக்கு நேர்ந்திருக்காது."**
அந்த நாளுக்குப் பிறகு, பால் விற்பனையாளர் தன் தவறை உணர்ந்து நேர்மையானவனாக வாழ்ந்து வந்தான்.
**கதை நெறி**:
**தவறான வழியில் சம்பாதிப்பது நிரந்தரமாக நம்மிடம் இருக்காது. நெறியுடன் வாழ்வதே உண்மையான செல்வம்.**
இன்றைய செய்திகள்
10-12-2024
தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment