Songs

Monday, December 23, 2024

ஐந்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இரண்டு பாடல்கள்


ஐந்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்த 


கல்வியே தெய்வம்

அன்னையும் தந்தையும் தெய்வம் இதை

அறிந்திட வேண்டும் நீயும்

கண்ணெனும் கல்வியும் தெய்வம் - இதைக் 

கருத்தினில் கொள்வாய் நீயும்

பொன்னையும் மண்ணையும் விஞ்சும் அந்தப் 

புகழும் நம்மைக் கொஞ்சும்

நன்மையும் மென்மையும் தோன்றும் - நல

நயமதும் நம்மை அண்டும்

கல்வியைக் கற்றிட வேண்டும் - அதை

கசடறக் கற்றிட வேண்டும்

வல்லமை பெற்றிட வேண்டும்-நல்

வளமதை எட்டிட வேண்டும்

கற்றிடக் கற்றிட யாவும் - நல்

கணக்கென நெஞ்சில் கூடும்.

வெற்றிகள் ஆயிரம் சேரும் புகழ்

வெளிச்சமும் மேனியில் ஊறும்

விண்ணையும் அளந்திட வைக்கும் நம்மை 

விடியலாய் எழுந்திட வைக்கும் 

திண்மையும் வசப்பட வைக்கும் மனதில்

தெளிவினை செழிக்கிட வைக்கும்

பாரதி சுகுமாரன்



அறநெறிச்சாரம்


தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்

ஆய பொழுதாற்றும் ஆற்றலும்- காய்விடத்து

வேற்றுமை கொண்டுஆடா மெய்ம்மையும் இம்மூன்றும்

சாற்றுங்கால் சாலத் தலை

- முனைப்பாடியார்

No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...