VIII TAMIL MEMORY POEMS IN MP3, PLEASE CLICK
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே! *
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!
-பாரதியார்
*ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! - கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்
பாட இந்த ஓடை எந்தப் பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார்
ஈடு செய்யப் போரா ரோடி!
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக் குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச் செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்*
வாணிதாசன்
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்*.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்*.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு*.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து.
கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.*
பேர்தற்கு அரும்பிணி தாம் இவை அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே
உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவாரம்:...
இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீயதனை நித்தம் நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே!*
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
No comments:
Post a Comment