31-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2025 திருக்குறள் பால் : பொருட்பால் அதிகாரம் : அவை அஞ்சாமை குறள் எண்: 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். பொருள் : கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்." பழமொழி : அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். The fearless goes into the assembly. இரண்டொழுக்க பண்புகள் : *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். * தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன். பொன்மொழி : புத்தக கடையில் புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது நல்ல புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்னை முன்னேற்றம் நோக்கி புரட்டி போட வைக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம்..... பொது அறிவு : 1.நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம் விடை : ஊதா. 2. பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது? விடை : கல்லீரல் English words & meanings : Pliers-...