Songs

Wednesday, January 29, 2025

30-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண்: 724


கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.


பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."


பழமொழி :

Do good to those who harm you


பகைவனை நேசித்துப்பார்


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 


 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :


வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு , வேடிக்கை பார்த்தவர்க்கும்,விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.......,


பொது அறிவு : 


1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?


விடை: தென்பெண்ணை


2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?


விடை: சாரதா கால்வாய்


English words & meanings :


Needle-ஊசி,                                        


Pliers-இடுக்கி 


வேளாண்மையும் வாழ்வும் : 


பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.


நீதிக்கதை


 அச்சம் 


அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும்தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால்  அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார்.


அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு  ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.


 பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள்  கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின்  குகையின் அருகே  அமைக்கப்பட்டது.


அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.


 நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.



இன்றைய செய்திகள் - 30.01.2025


* தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.


* சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.


* சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.


* ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.


* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibusses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.


*Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.


* The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.


* ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.


* ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.


* ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place





No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...