Songs

Tuesday, January 28, 2025

29-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 783


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு.


பொருள் : நூலின் நற்பொருள் படிக்கப் படிக்க மேன்மேலும் இன்பம் தருவதைப் போல, நற்பண்புடையவரின் நட்பு ஒருவருக்கு பழகப் பழக இன்பம் தரும்."


பழமொழி :

ஆயிரம் கல் தொலைவு பயணமும் ஒரே ஒரு எட்டில் தான் துவங்குகிறது .


A journey of a thousand miles begins with a single step.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *திடீரென  மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 


 *மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.


பொன்மொழி :


வாய்மைக்கு மிக நெருக்கமான நண்பன் அச்சமின்மையே.---ஜவஹர்லால் நேரு


பொது அறிவு : 


1. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை எது?


விடை : பங்கு வணிகச்சந்தை


2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது______


விடை: தொழிற்புரட்சி


English words & meanings :


 Hammer.      - சுத்தி           Handsaw -      ஈர்வாள்/ரம்பம்


வேளாண்மையும் வாழ்வும் : 


பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது.


நீதிக்கதை


அன்பு எதையும் சுமக்கும் 


 துறவி ஒருவர்  தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்.அது செங்குத்தான மலை. மலையின் மேலே ஏற ஏற சுமை சற்று அதிகமானதாக தோன்றியதுடன் அவருக்கு  மூச்சு வாங்கியது.


 சற்று தூரம் முன்னால் சென்றபோது மலைவாழ் சிறுமி ஒருத்தி தனது மூன்று வயதுள்ள தம்பியை முதுகில் சுமந்து கொண்டு உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டு  


 மிக சாதாரணமாக மலை உச்சியை நோக்கி ஏறுவதை பார்த்தார்.துறவிக்கோ மிகவும் ஆச்சரியம். அவர் சிறுமியை பார்த்து, "என்னம்மா இவ்வளவு சிறிய பையை தூக்கிக்கொண்டு மலையை ஏற என்னால் முடியவில்லை. உன்னால் எப்படி இவ்வளவு பெரிய பையனை தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது?என்றார்.


அதற்கு  அந்த சிறுமி பதில் சொன்னாள்,"ஐயா நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை. நான்  தூக்கிக் கொண்டிருப்பது எனது தம்பியை என்றாள்.துறவிக்கு புரிந்தது அன்பு எதையும் சுமக்கும் என்று. 



இன்றைய தலைப்புச் செய்திகள்


* பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவத் தயாராக உள்ளது. வரைபடங்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நேவிக் நிறுவனத்தின் 2வது தலைமுறை செயற்கைக்கோளை நாளை ஏவும் முக்கியமான பணியை இது மேற்கொள்ளும்.


* இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகை தந்து தொல்பொருள் இடங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களை பார்வையிடும்.


* ஊட்டி: ஈஸ்வரன் கோயில் திருவிழாவின் போது பாரம்பரிய படுகர் மக்களின் வண்ணமயமான குடை ஊர்வலம். பக்தர்கள் 600 படிகள் நடந்து விழாவைக் கொண்டாடினர்


* நம் நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் ஒரு அதிநவீன கார் தொழிற்சாலையை கட்டி வருகிறது.


* பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. த்ரிஷா சதத்துடன் வரலாறு படைத்தார்.


Today's Headlines

* The Tamil Nadu government has announced that the law providing strict punishment for crimes against women will come into effect from January 25.

* ISRO is ready to launch its 100th rocket from Sriharikota in Andhra Pradesh. It will carry out the important mission of launching NavIC's 2nd generation satellite, which will provide services including maps, tomorrow.

* A seven-member team of Indian Foreign Service officers will visit Tamil Nadu and visit various landmarks including archaeological sites and archaeological sites.

* Ooty: The traditional Padukar people's colorful umbrella procession during the Easwaran temple festival. Devotees celebrated the festival by walking 600 steps

* To meet the demand for electric vehicles in our country, Winfast is building a state-of-the-art car factory in Thoothukudi.

* India beat Scotland by 150 runs in Women's T20 World Cup. Trisha creates history with century







No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...