Songs

Sunday, January 5, 2025

06-01-2025- பள்ளி காலை நேர வழிபாட்டு செயல்பாடுகள்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -                                     06.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:796


கேட்டினும் உண்டுஓர் உறுதி இளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல் .


பொருள்:கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.


பழமொழி :

விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.  


Perseverance kills the game.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


கல்வி என்றால் ஏதோவொரு சான்றிதழைப் பெறுவது அல்ல, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வது.-----சத்குரு


பொது அறிவு : 


1. மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதத்தின் அளவு


விடை : 100%.

 2. நரம்பு மண்டலத்தின் அலகு 


விடை: நியூரான்


English words & meanings :


 curt-வெடுக்கென்று,


 risk- விறுவிறுப்பான


வேளாண்மையும் வாழ்வும் : 


வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.



06-01-25  இன்று 


சர்வதேச வேட்டி (2015 முதல்) தினம்.  


கலாஷேத்திரா பவுண்டேஷன் (1936) சென்னையில் தொடங்கப்பட்டது. 


பார்வையற்றவர்களுக்கான  எழுத்தை உருவாக்கிய லூயி ப்ரெயில் (1852), மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் (1884)  ஆகியோரின் நினைவு தினம். 


இசை புயல்  பத்ம பூஷன்ஏ. ஆர். ரகுமான் (1967)  இந்திய கிரிக்கெட் அணியின்  தலைவர்  பத்ம பூஷன் கபில்தேவ் (1959), ஓவியர் கவிஞர் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலீல் ஜிப்ரான் (1883) ஆகியோரின் பிறந்த தினம்.



குரங்கும் தொப்பியும்

ஒரு மழைக்காலத்தில், ஒரு தொப்பி வியாபாரி கிராமங்களுக்கு நடுவே சென்றுகொண்டிருந்தார். இரவில் தூங்க சாலையின் ஓரத்தில் ஒரு பெரிய மரத்தின்கீழ் தங்கினார். அதே மரத்தில் பல குரங்குகள் வசித்தன.

அந்தக் குரங்குகள் வியாபாரியின் பையில் இருந்த அழகான தொப்பிகளை கவனித்தன. வியாபாரி உறங்கியதும், குரங்குகள் பையை திருடி, ஒவ்வொருவரும் ஒரு தொப்பியை அணிந்துகொண்டன.

வியாபாரி விழித்தபோது, குரங்குகள் அனைத்து தொப்பிகளையும் உடைத்து மரத்திற்குப் போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். வியாபாரி பலவிதமாக முயற்சித்தார், ஆனால் குரங்குகள் ஒற்றுமையாக இருந்தன.

அதற்குப் பிறகு, அவருக்கு ஒரு யோசனை வந்தது. குரங்குகள் மனிதர்களை நகலெடுக்க விரும்புவதாக அவர் அறிந்திருந்தார். உடனே, அவர் தனது தொப்பியை வெளியே எடுத்து, தரையில் போட்டார். குரங்குகள் கூட அதையே செய்தன! அவர்களின் தொப்பிகளை ஒருவருக்கொருவர் தரையில் போட்டன.

வியாபாரி திருப்தியாக அனைத்தையும் திரும்பக் கூடுங்கோட்டியில் சேகரித்தார்.


நீதி:

அறிவு, நேர்மறையான யோசனைகள், மற்றும் தன்னம்பிக்கையுடன் நீங்கள் எந்த பிரச்சினையும் சமாளிக்க முடியும்!



இன்றைய தலைப்புச் செய்திகள்!


‣ தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. கடந்த கால சர்ச்சைகளின் காரணமாக, கவனம் பெற்றுள்ள ஆளுநர் உரை.



‣ அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு. தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் விநியோகிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


‣ ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலத்தில், பயணிகள் ரயில் சோதனை ஓட்டம். இந்தியாவின் முதல் ரயில்வே கேபிள் பாலத்தில், ரயில் ஓடிய கண்கொள்ளாக் காட்சி.


‣பஞ்சாப்பில் விவசாயி ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதம் 41 நாட்களைக் கடந்தது. சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தகவல்


‣பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என சுனில் கவாஸ்கர் அதிருப்தி. ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்கியிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றும் ஆதங்கம்.


Today's Headlines!


‣ The Tamil Nadu Legislative Assembly session begins today with the Governor's address. The Governor's address has received attention due to past controversies.


‣ Online booking to participate in the Avaniyapuram, Palamedu, Alanganallur Jallikattu competitions from today. The district administration has announced that tokens will be distributed only to eligible persons.


‣ Passenger train test run on the world's highest railway bridge in Jammu and Kashmir. A spectacular sight as the train ran on India's first railway cable bridge.


‣ Farmer Jagjit Singh Thallewal's hunger strike in Punjab has crossed 41 days. Doctors have informed that his kidney and liver are affected and his condition has deteriorated.


‣Border - Sunil Gavaskar is unhappy that he was not invited to present the Gavaskar Trophy.  I think I would have been happy if the trophy had been given to the Australian team.

No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...