Songs

Wednesday, January 8, 2025

09-01-2025-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் :நட்பு ஆராய்தல்


குறள் எண்:798


உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க

அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு .


பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும்; அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.


பழமொழி :

வைகறைத் துயிலெழு. 


 Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.


இரண்டொழுக்க பண்புகள் :  


*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.                               


*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.


பொன்மொழி :


செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்.---சுந்தர் பிச்சை.


பொது அறிவு 


1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 


கிழக்கு சகாரா பாலைவனம். 


2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது? 


ஜெர்மனி.


English words & meanings :


Establish - நிறுவு

 Estate -பண்ணை

 Evade - மழுப்பு 


வேளாண்மையும் வாழ்வும் :

  • உணவு உற்பத்தி
    வேளாண்மை மூலம் மக்கட்தொகைக்கு தேவையான உணவுப் பொருட்கள், பருத்தி, எண்ணெய் வித்துகள், கீரைகள், காய்கறிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • பொருளாதார வளர்ச்சி
    ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மைக்கு பெரும் பங்குள்ளது. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் வேளாண்மையை தழுவியே வாழ்கின்றனர்


  • 09-01-25  இன்று 


    வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்.  வெளி நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.  


    புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் (1921) நடைபெற்றது.  


    ஐ. நா. வின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக (1951) திறக்கப்பட்டது. 


    சூரிய மண்டலத்தின் புறவழிக் கோள்கள் முதல் தடவையாக (1992)  கண்டுபிடிக்கப்பட்டன.  


    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ்  ஐ போனை (2007)  சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.  


    மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான ஹர் கோவிந்த் கொரானா (1922), பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் டி  ஆர்.  ராமச்சந்திரன் (1917)  ஆகியோரின் பிறந்த தினம்.

    தெனாலிராமன் மற்றும் கொள்ளையர் கும்பல்

    ஒருநாள் தெனாலிராமன் தனது கிராமத்தில் இருந்தபோது, சில கொள்ளையர்கள் அவருடைய வீட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். தெனாலிராமன் அவர்கள் திட்டத்தை அறிந்து, புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள முடிவு செய்தார்.

    அவருடைய வீட்டின் பின்புறம் ஓர் பெரிய தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி வைத்தார். கொள்ளையர்கள் வந்த போது, அவ்விடத்தை அவர்களுக்கு செல்வங்களால் நிரப்பப்பட்ட களஞ்சியமாக தோற்றமளிக்கச் செய்தார்.

    அவர்கள் அனைத்து "செல்வங்களையும்" எடுத்துச் செல்வதற்காக தொட்டியை காலி செய்ய ஆரம்பித்தனர். அது வெறும் தண்ணீர்தான் என்பதை அவர்கள் உணர்ந்தபோது, அவர்கள் வழுக்கி விழுந்தனர், கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து தங்களது முயற்சியை கைவிட்டனர்.

    தெனாலிராமன் அவர்களது முயற்சியை தோற்கடித்தத뿐மல்லாமல், மற்றவர்களுக்கும் நீதியைக் கூறி, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று பாடம் கற்றுத்தந்தார்.

    கதைதான் சொல்லும் நீதிசாரம்:

    அறிவுக்கும், நகைச்சுவைக்கும் இணைந்தால், எந்த சிக்கலையும் சுலபமாக சமாளிக்கலாம்.

  • கதை


  • இன்றைய செய்திகள் - 09.01.2025


    * பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்!


    * ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


    * டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.


    * இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.


    * ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.


    Today's Headlines


    * Pongal gift set ready... Distribution in ration shops from tomorrow!


    * Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.


    * Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.


    * ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.


    * ISL Football Series: FC Goa - Hyderabad FC match 'Draw

  • No comments:

    Post a Comment

    02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...