பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:பழைமை
குறள் எண்:801
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
பொருள்:பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
பழமொழி :
Abused patience turns to fury.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.
* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.
பொன்மொழி :
உங்களின் பணிவு தான் உங்கள் முன்னேற்றமாக மாறும்.-,---ரமணர்
பொது அறிவு :
1. மனிதனின் எந்த உறுப்பில் அதிகளவு பாக்டீரியாக்கள் வாழுகின்றன?
விடை : நாக்கு.
2. இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அருவி எது?
விடை : ஒகேனக்கல்
English words & meanings :
Jar-ஜாடி,
Jug-கூஜா
வேளாண்மையும் வாழ்வும் :
வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது
நீதிக்கதை
தெனாலிராமன் பூனை வளர்த்தது
விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார்.
தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான்.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.
கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.
பாலைக் கண்டதுமே அந்தப் பூனை ஓட்டமெடுத்தது. அது சூடுகண்ட பூனை பாலைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கிறது!”
என்றார்.
தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் பாலுணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான்.
இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.
இன்றைய செய்திகள் - 20.01.2025
* மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.
* “தமிழக நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது; மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கடன் சுமை” - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
* அமெரிக்காவில் அமலுக்கு வந்தது டிக்டாக் தடை: பிளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி; காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.
* ஆக்கி இந்தியா லீக்: கோனாசிகா அணியை வீழ்த்தி உ.பி.ருத்ராஸ் வெற்றி.
Today's Headlines
* Rains increase water flow to Chennai drinking water lakes from catchment areas.
* “Tamil Nadu’s financial situation is under control; debt burden due to non-allocation of funds by the central government” - Minister Thangam Tennarasu informs.
* It has been reported that the budget session of Parliament will begin on January 31 and the central budget will be presented on February 1.
* TikTok ban implemented in the US: Removed from Play Store as well.
* Australian Open tennis tournament; Djokovic advances to the quarterfinals.
* Hockey India League: UP Rudras defeats Konasika team to win
Prepared by
No comments:
Post a Comment