Songs

Sunday, January 26, 2025

27-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண்: 655


எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 

மற்றன்ன செய்யாமை நன்று.


பொருள்: பின்னாளில் நினைத்து வருத்தப்படத் தக்க செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையுடைய செயல்களைச் செய்யக் கூடாது.


பழமொழி :

தீய பண்பைத் திருத்தி நல்ல பண்பை பொலிவுறச் செய்யும் கல்வி. 


Education polishes good nature and corrects bad ones.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


" கோழையும் முட்டாளுமே ' இது என் விதி ' என்பர், ஆற்றல் மிக்கவரோ 'என் விதியை நானே வகுப்பேன் ' என்பர்".----விவேகானந்தர்.


பொது அறிவு : 


1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது


2.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?


விடை: சத்யஜித்ரே


English words & meanings :


 Mug-குவளை,


 Tub-தொட்டி


வேளாண்மையும் வாழ்வும் : 


18-வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.



நீதிக்கதை: 


திருடன் மற்றும் விவசாயி

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் மொத்தம் பயிர்கள் வளர்த்து, மிகவும் உழைத்துக் கொண்டிருந்தார். அவ்வாறு உழைத்து கிடைத்த பயிர்களை வீட்டு அருகிலேயே அம்பாரத்தில் சேமித்து வைத்திருந்தார்.

ஒருநாள் இரவில், திருடன் ஒருவன் அம்பாரத்தில் கள்வியிட நினைத்தான். அப்போது விவசாயி விழித்துக் கொண்டு, அந்த திருடனை பிடிக்க முயன்றார். திருடன் தப்பிக்க முயற்சி செய்த போது, விவசாயி அவனை பிடித்து, "ஏன் இதைப் பண்றே? உன் வாழ்க்கை இதற்கு வேண்டுமா?" என கேட்டார்.

திருடன் சிரித்துக்கொண்டு, "எனக்கு சாப்பிட பசிக்கிறது. எனது பிழைப்பு இந்தப் பாவத்தில்தான் இருக்கிறது" என்றான்.

விவசாயி சொன்னார்: "நீ ஒரு பிழையாக உழைப்பதைப் போய் கள்வியால் வாழ்கிறாய். உன் உழைப்பில் கிடைத்த உணவின் சுவை உண்மையாக இருக்கும்."

அப்போதிருந்து, திருடன் கள்வியைக் கைவிட்டு, விவசாயியிடம் வேலைக்கு சேர்ந்தார். அவன் மாறிய வாழ்க்கை, அனைத்து கிராமத்தினருக்கும் முன்மாதிரியானது.

நீதி: உழைப்பால் வந்த வாழ்வு மட்டுமே நீண்ட நாள் நன்மை தரும்.







இன்றைய செய்திகள் - 27.01.2025


* சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


   

* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



* உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines


* 23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.


* Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.


* Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.


* The US government has decided to suspend funding for global aid programs.


* Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship



No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...