பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :நட்பு
குறள் எண்: 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
பொருள்: தம்மால் முடியக்கூடிய செயலையும், முடிக்க முடியாதபடி கெடுப்பவரின் நட்பை, அவர் அறியும்படி எதுவும் சொல்லாமலே தளரச் செய்து கை விடுதல் வேண்டும்."
பழமொழி :
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
A car without a linch-pin will not move even three spans.
இரண்டொழுக்க பண்புகள் :
*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.
பொன்மொழி :
நடக்கும் முன்னே.. நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்,நடந்த பின்னே ... நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.
பொது அறிவு :
"1.கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் எது?
விடை: ஆந்த்ராக்ஸ்.
2. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
விடை: சுரதா
English words & meanings :
Asafoetida-பெருங்காயம்,
Basil-துளசி
வேளாண்மையும் வாழ்வும் :
வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் மரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.
நீதிக்கதை
ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நீரால் நிரம்பியது. ஏரியின் குளிர்ச்சியை தாங்க முடியாத தவளை ஒன்று, மழை நின்றவுடன் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்குமே என நினைத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தது.
பல காலமாக அந்த கிணற்றில் வாழ்ந்து வந்த மற்றொரு தவளை இந்த புதிய தவளையை வரவேற்றது. மேலும்,பொந்தில் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை எடுத்து புதிய தவளைக்கு கொடுத்து மகிழ்ந்தது.
கிணற்றில் இருந்த மற்ற தவளைகளுக்கு புதியதாக வந்த தவளையை பிடிக்கவில்லை.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்பொழுது கிணத்து தவளை ஏரி தவளையிடம், "நண்பனே! இத்தனை நாள் நீ எங்கே தங்கி இருந்தாய்?" என்று கேட்டது.
அதற்கு புதிய தவளை, நான் ஏரியில் தங்கி இருந்தேன் அங்கு மீன், முதலை,ஆமை போன்றவை வாழ்கின்றன. ஏரி இந்த கிணற்றை விட மிகப்பெரியதாக இருக்கும்" என்று கூறியது.
அதற்கு அந்த கிணற்றுத் தவளை மிகவும் கோபத்துடன் "நண்பா நீ பொய் சொல்கிறாய். இந்த கிணற்றை விட மிகப்பெரிய நீர் நிலை இந்த உலகத்திலேயே இல்லை என்று கூறியது.ஏரி தவளை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.
எல்லா கிணற்றுத் தவளைகளும் ஏரி தவளையை பார்த்து," நீ பொய்யன். நீ பொய் சொல்கிறாய் கிணற்றை விட பெரிய நீர் நிலை உலகில் எதுவும் இல்லை என்று ஒரு சேர சத்தமிட்டன.
அப்போது ஒரு பெண்மணி தண்ணீரை எடுப்பதற்காக வாழியை கிணற்றுக்குள் இறக்கினார். அந்த வாளிக்குள் ஏறி கிணற்றில் இருந்து வெளியே வந்தது ஏரி தவளை,
குளிர்ச்சியான தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏரியை நோக்கி சென்றது.
நீதி: முட்டாள்களுடன் இருப்பதை விட தனியே இருப்பதே சிறந்தது
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment