பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -
19-02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண்:818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்ஆடார் சோர விடல்.
பொருள்:
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு
ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்."
பழமொழி :
சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.
He who has a brother does not fear to fight.
இரண்டொழுக்க பண்புகள் :
*என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.
*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.
பொன்மொழி :
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் - விவேகானந்தர்..
பொது அறிவு :
1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ?
1914 ஆம் ஆண்டு .
2. உலக சமாதான சின்னம் எது ?
ஒலிவ் மரத்தின் கிளை.
English words & meanings :
Confusedகுழப்பமான,
Curiousஆர்வமாக
வேளாண்மையும் வாழ்வும் :
நோயை ஒழிக்க பூச்சிக் கொல்லிகள் உபயோகப் படுத்துவதை விட இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீதிக்கதை
போட்டி
ஒரு அரசருக்கு மூன்று மகன்கள். அவர்களில் யார் கையில் அரச பதவியை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். ஆகவே அரசர் அவர்கள் மூவருக்கும் போட்டி ஒன்றை வைத்தார்.
காட்டுக்குச் சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவினை எடுத்து வந்து ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும் என்றார் அரசர்.
மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாமவன் மரத்தின் மீது சிரமப்பட்டு ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டையாக கட்டினான்.
இரண்டாமவன் மரத்தின் மீது ஏற கஷ்டப்பட்டு கீழே கிடந்த அழுகிய பழங்களை எடுத்து மூட்டையாக கட்டினான்.
மூன்றாமவன் ஏழை தானே சாப்பிட போகிறார் என்று அலட்சியத்துடன் நினைத்து வெறும் குப்பைகளை மூட்டையாக கட்டினான்.
மூவரும் அரசரிடம் வந்தனர். பின்பு அரசர் மூவரையும் பார்த்து, "நான் சொன்ன ஏழைகள் வேறு எவரும் இல்லை நீங்கள்தான்.
நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார்.
நல்ல பழங்களை கொண்டு வந்த முதலாமவனே நன்றாக சாப்பிட்டு நலமுடன் திரும்பினார். பின்னர் அரச பதவியையும் ஏற்றார்.
நீதி : நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்
இன்றைய செய்திகள் - 19.02.2025
* வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
* போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.
* புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
* கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி.
* 3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே.
Today's Headlines
* Tamil Nadu Chief Minister M.K. Stalin awarded the "Living Crafts Tradition Award" to 9 skilled craftsmen and the "Poompuhar State Award" to 9 skilled craftsmen.
* The certificates of teachers who were punished in the POCSO cases will be cancelled. Henceforth, police verification certificates will be made mandatory for new teacher appointments, announced Chief Secretary Muruganandam.
* Vivek Joshi, a 1989-batch Indian Administrative Service officer from Haryana, has been appointed as the new Election Commissioner, announced by Ministry of Law.Russia has expressed its readiness to hold talks with Ukrainian President Zelensky if necessary.
* Qatar Open Tennis Tournament: Spanish player Alcaraz qualifies for the 2nd round.
* 3rd One-Day Match: Zimbabwe wins the series by defeating Ireland
No comments:
Post a Comment