பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02-2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு.
பொருள்:அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம்
அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
பழமொழி :
சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது.
Even a forest will not hold their wrath when the meek are enraged.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை கருவியாகும்
–ஜோசப் அடிசன்
பொது அறிவு :
1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
விடை: பன்னா.
2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரு
English words & meanings :
Grief - துக்கம்,
Guilty - குற்ற உணர்ச்சி
வேளாண்மையும் வாழ்வும் :
கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகளை சமாளிக்க ஒரு வழி தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், ஆரோக்கியமான தாவரங்கள் தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.
நீதிக்கதை
பெற்றோர்
ரப்பரை பார்த்து பென்சில், "ஒவ்வொரு முறையும் நான் செய்த தவறுக்கு என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தப்படுத்தும் பொழுது நீ குறைந்து கொண்டே செல்கிறாய். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறியது.
அதற்கு ரப்பர், "அது என் கடமை நான் படைக்கப்பட்டதே அதற்காகத்தான். என்னைக் கண்டு நீ வருத்தப்பட வேண்டாம். இதில் எனக்கு மிக மகிழ்ச்சியே. என்னால் உன் தவறுகள் அளிக்கப்பட்டு நீ முன்னேறிச் சென்றால் அதுவே என் வெற்றி. நான் கரைவதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறியது.
அந்த ரப்பர் வேறு யாரும் இல்லை நமது பெற்றோர் தான். அவர்கள் தான் ஆயுள் முடியும் வரை நமது தவற்றை திருத்திக் கொண்டே இருப்பார்கள்.நம் மீது பொறாமை படாத உள்ளங்கள் நம் பெற்றோர்களே.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment