பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால் அதிகாரம்:
புல்லறிவாண்மை
குறள் எண்:843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்
துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்."
பழமொழி :
சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.
Form friendships after due deliberation, having done so do not give place to doubt.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர்
பொது அறிவு :
1. மீன்கள் இல்லாத ஆறு எது?
விடை: ஜோர்டான் ஆறு.
2. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை : தமிழ்நாடு
English words & meanings :
Hungry - பசி
Interest. - விருப்பம்
வேளாண்மையும் வாழ்வும் :
மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்
நீதிக்கதை
எறும்பு
ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக கூறி புரிய வைக்க நினைத்தார்.
"ஒரு நாள் ஓர் எறும்பு சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.
சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த விரிசலின் மீது வைத்து,அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.
மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment