பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :மானம்
குறள் எண் :961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
பொருள்:இன்றியமையாதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப் பெருமைக்குக் குறைவானவற்றை செய்தலாகாது.
பழமொழி :
Face the danger boldly than live with in fear.
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
செய்யும் காரியம் தவறாகும் போது,நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----
பொது அறிவு :
1. எந்த மாதத்தில் பிறப்பு விகிதம் அதிகம்?
விடை : ஆகஸ்ட்.
2. அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை முதன்முறை எங்கு செயல்பட்டது?
விடை : சீனா
English words & meanings :
Land. - நிலம்
Lighthouse. - கலங்கரை விளக்கம்
வேளாண்மையும் வாழ்வும் :
உலகம் முழுவதும், நீர் ஆதாரங்கள் மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன,
நீதிக்கதை
காணிக்கை
ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றிருந்தான்.
அவன் விரித்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது.
அந்த கழுகின் இறகுகளை மட்டும் வெட்டி அதனை சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்துக் கழுகை வாங்கி தன் வீட்டில் அன்புடன் வளர்த்து வந்தார்.
இறகுகள் நன்கு வளர்ந்த பின்பு அதனைப் பறக்க விட்டார். கழுகு பறந்து செல்லும்போது ஒரு முயலைப் பார்த்தது. அதை பிடித்து வந்து தன்னை காப்பாற்றிய அவருக்கு காணிக்கையாகக் கொடுத்தது.
இதைப் பார்த்த நரி, "உன்னை பிடித்த வேடனிடம் இந்த முயலை கொடுத்திருந்தால், பின்னாளில் அவன் உன்னை பிடிக்காமல் விட்டிருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய்?" என்று கேட்டது.
அதற்கு கழுகு,"இல்லை. நீ சொல்வது தவறு. வேடனிடம் கொடுத்திருந்தாலும் பின்னாளில் அவன் என்னை பிடிக்கத்தான் செய்வான். ஏனெனில் அது அவனுடைய தொழில். ஆனால் என்னை காப்பாற்றிய அவருக்கு நான் காணிக்கையாக இதைச் செய்தேன்"என்று கூறியது.
நீதி : உதவி செய்தவரிடம் நன்றியுடனும் விசுவாசத்தடனும் இருப்பது தான் பண்புள்ள செயல்.
இன்றைய செய்திகள் - 01.04.2025
* அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
* வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப்ரல் 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்க உள்ளது.
* மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.
* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி செர்பிய வீரர் மென்சிக் சாம்பியன்.
* கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி.
Today's Headlines
* To address the increasing electricity demand, the Tamil Nadu Electricity Board plans to implement a 660-megawatt expansion project for the Ennore Thermal Power Plant.
* A "ChatGPT" training workshop for business owners and entrepreneurs will be held in Chennai on April 3rd.
* The Armed Forces Special Powers Act has been extended for another six months in Manipur and other northeastern states.
* The death toll from the earthquake in Myanmar has risen to 2,056.More than 3,900 people have been injured.270 people are still missing, according to the Myanmar military junta.
* Serbian player Mensik defeated Djokovic to win the Miami Open tennis championship.
* The Brazilian legends team defeated the India All-Stars team in a football friendly match
No comments:
Post a Comment