பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் : சூது
குறள் எண்:931
வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.
பொருள்:வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.
பழமொழி :
Better one word in time than two afterward.
வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் மேற்கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :
*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.
*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.
பொன்மொழி :
உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும் --- அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1. இந்திய விண்வெளி மையம் இஸ்ரோ அமைந்துள்ள இடம் எது?
விடை: பெங்களூரு
2. பாம்பின் நுரையீரல்களின் எண்ணிக்கை என்ன?
விடை: 1
English words & meanings :
Stress - அழுத்தம்
Suffering - துன்பம்
வேளாண்மையும் வாழ்வும் :
கரிம வேளாண்மைக்கு தொழிலாளிகள் மற்றும் அறிவுத் திறன் ஆகிய இரண்டும் மிக அதிக அளவில் தேவைப்படும்..
நீதிக்கதை
ஒட்டகங்கள்
ஒருவர் குருவிடம் சென்று, "ஓடிக்கொண்டே இருக்கிறேன் பல பிரச்சனைகள். வீட்டில்,வேலை செய்யும் இடத்தில், கிராமத்தில் என்று எங்கு சென்றாலும் பிரச்சனைகள் தான். என்னால் நிம்மதியாக தூங்கவே இயலவில்லை. எனக்கு தீர்வை சொல்லுங்கள்" என்று முறையிட்டார்.
அப்போது மாலை நேரம்.குரு அவரிடம் தோட்டத்திற்குச் சென்று "ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று பார்த்து வா. அதன் பின் உனக்கு தீர்வை சொல்கிறேன்" என்றார்.
சென்றவர் திரும்பி வந்து "நூறு ஒட்டகங்களும் நின்று கொண்டு தான் இருக்கின்றன" என்று கூறினான். "நல்லது. நீ சென்று நூறு ஒட்டகங்களும் படுத்தபின் அங்கு இருக்கும் ஓய்வறையில் தூங்கிவிட்டு,காலையில் வந்து என்னை பார்" என்று குரு கூறினார்.
" சரி குருவே", என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றவர்,சிறிதும் தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலையில் வந்து குருவிடம் "ஐயா இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை" என்று கூறினார்.
" என்ன ஆச்சு? " என்றார் குரு. அதற்கு அவர்,"சில ஒட்டகங்கள் தானாகவே படுத்துக் கொண்டன.சில ஒட்டகங்களை மெனக்கெட்டு நான் படுக்க வைத்தேன். சில ஒட்டகங்கள் படுக்கும் பொழுது வேறு சில ஒட்டகங்கள் எழுந்து கொண்டன. ஆக மொத்தத்தில் எல்லா ஒட்டகங்களையும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க இயலவில்லை. அதனால் நான் தூங்குவதற்கு செல்லவே இல்லை" என்று கூறினார்.
குரு சிரித்துக்கொண்டே, "இதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை முடிப்பது என்பது ஒட்டகங்களை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாகவே முடிந்து விடும். சில பிரச்சனைகளுக்கு
நாம் தீர்வு காணலாம். சில பிரச்சனைகளை முடிக்கும் போது வேறு சில பிரச்சினைகள் தோன்றும். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால் தான் தூங்க முடியும் என்றால் இந்த உலகத்தில் எவராலும் தூங்க இயலாது.
தீர்க்க முடிந்த பிரச்சனைகளை தீர்த்து விட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு, உங்களுக்கான ஓய்வறையில் நிம்மதியாக தூங்குங்கள்" என்றார்.
சில நாட்கள் கழித்து, திரும்பி வந்து குருவிடம் அவர், "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்று கூறினார்
.
No comments:
Post a Comment