பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03-2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :சூது
குறள் எண்:935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
பொருள்:சூதாடு
கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."
பழமொழி :
வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.
A diamond must be cut with a diamond.
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.
*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
பொன்மொழி :
வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?
விடை : ஜெர்மனி.
2. மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?
விடை: நிக்கோலா டெஸ்லா
English words & meanings :
Cooking. - சமைத்தல்
Dancing. - நடனம்
வேளாண்மையும் வாழ்வும் :
உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது
நீதிக்கதை
சிட்டுக்குருவியும் காகமும்
ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.
அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற பறவைகள் கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.
அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.
இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது.
நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை கேட்க வேண்டும்.
இன்றைய செய்திகள் - 07.03.2025
* ரூ.274 கோடியில் ஒன்றரை ஆண்டாக நடந்துவந்த எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை பணி நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்.
* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளால் 2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் - நீதிபதி அதிருப்தி.
* மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 4.1 அலகுகளாக பதிவானது.
* பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.
* ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி.
Today's Headlines
* Chennai's Ezhumbur - Marina 4th line project completed at a cost of ₹274 crores; trial run soon.
* Court expresses dissatisfaction over non-compliance with its orders, says 550 contempt cases filed against officials in 2 months.
* Two earthquakes hit Manipur within an hour, measuring 5.7 and 4.1 on the Richter scale.
* ₹80,000 crore worth of gold reserves discovered in Pakistan's Sindh region.
* Indian chess players Praggnanandhaa and Aravindh lead in the Braintree Masters International Chess Tournament.
* Indian shuttler Pranav wins in the opening round of the Orleans Masters Badminton Tournament
No comments:
Post a Comment