Songs

Tuesday, March 11, 2025

11-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :சூது

 குறள் எண்:935


கவறும் கழகமும் கையும் தருக்கி

 இவறியார் இல்லாகி யார்.


பொருள்:சூதாடு

கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."


பழமொழி :

வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.   


A diamond must be cut with a diamond.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.


*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :


வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை,  ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி


பொது அறிவு : 


1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது? 


விடை :  ஜெர்மனி.    


2. மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?  


விடை: நிக்கோலா டெஸ்லா 


English words & meanings :


 Cooking.  -   சமைத்தல்


Dancing.   -    நடனம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது


மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.



நீதிக்கதை


 சிட்டுக்குருவியும் காகமும் 


ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.


அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது


அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.


இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து  சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது. 


 நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை  கேட்க வேண்டும்


இன்றைய செய்திகள்

11.03.2025

* தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

* இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

* கனடா புதிய பிரதமரானார் மார்க் கார்னி: அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு பணிய மாட்டோம் என பேச்சு.

* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: காலிறுதியில் ஜார்கண்ட், மராட்டியம், மிசோரம், அரியானா அணிகள் வெற்றி.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* High Court judges have suggested that people who wanted join in Tamilnadu government jobs should know how to speak and write in Tamil in Tamil Nadu.

* In Tamil Nadu, in 2023-24, wind power installation increased by 9,015 MW and solar power capacity increased to 1,261 MW.

* Scott-1 is the world's first trading satellite to monitor the space created by Indian Start-up.It has taken the picture of South America and sent it by this it
started its operation.

* Mark Carni became the new Prime Minister of Canada: Saying  "we won't surrender ourselves for the  US mutual taxation".

* National Senior Women's Hockey Tournament: Jharkhand, Maratham, Mizoram and Haryana teams win in the quarter -finals.

* Indianwells Tennis Tournament: Progress to Jessica Begula 4th round




No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...