Songs

Wednesday, March 12, 2025

13-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942


மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.


பழமொழி :

Many hands make work light\


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


இரண்டொழுக்க பண்புகள் :  


   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  


*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.


பொன்மொழி :


எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு : 


1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்? 


விடை: ரோமானியர்கள். 


2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?


 விடை: நியூசிலாந்து


English words & meanings :


 Archery      -      வில்வித்தை


 Badminton       -      பூப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் : 


 இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்


நீதிக்கதை


 நரியும் புலியும் 


ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான். 


முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.


நரியும்  வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது  வண்ணம் பூசு" என்றது.  அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது.  நரி தனக்குள்  “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல்  சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை. 


வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.  ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி:  பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

13.03.2025

* மின் இணைப்புகளில் பொருத்துவதற்காக ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

* “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி; அமெரிக்காவின்கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதிபெறாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு.

Today's Headlines

1. Tamil Nadu Electricity Board tenders for 3.04 crore smart meters worth ₹20,000 crores.

2. Chennai Weather Research Centre predicts moderate rain in Tamil Nadu, Puducherry, and Karaikal from March 13 to 18.

3. India and Mauritius sign 8 Memoranda of Understanding .

4. US President Donald Trump says Ukraine is ready for a temporary ceasefire and hopes Russian President Putin will agree.

5. American tennis player Coco Gauff qualifies for the 4th round of the Indian Wells International Tennis Tournament.

6. India misses out on the World Test Championship, incurring a revenue loss of ₹38 crores


No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...