Songs

Wednesday, March 26, 2025

27-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்: 959


நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.


பொருள்:

நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.


பழமொழி :

தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு. 


Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்--- தந்தை பெரியார்


பொது அறிவு : 


1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?


மகாத்மா காந்தி மறைந்த தினம் .


2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.


English words & meanings :


 Hill      -     மலை

 

 Island         -     தீவு


வேளாண்மையும் வாழ்வும் : 


 நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.


நீதிக்கதை

 தலைமை அமைச்சர்


ஒரு அரசன் தன்  முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை  தலைமை  அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார்.அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.


தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.


 மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர்  மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.


மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை. 


இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே  தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.


நீதி :  முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.



இன்றைய செய்திகள் - 27.03.2025


* அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


* கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.


* டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


* வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


* மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States.


* Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore.


* It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests.


* The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela.


* Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals




No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...