28-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

28-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம் :குடிமை 

குறள் எண்: 960. 


நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்

 வேண்டுக யார்க்கும் பணிவு


பொருள்:

புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும்.


பழமொழி :

சொல் வல்லனை வெல்வது அரிது. 


 It is difficult to overcome the eloquent.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


பணிவு என்ற பண்பு இல்லாதவன் வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே--நபிகள் நாயகம்


பொது அறிவு : 


"1. ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை இடும்? 


விடை : 228 முட்டைகள்.


2. அணிலின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்? 


விடை :7 ஆண்டுகள்"


English words & meanings :


 Jungle.     -     காடு

 

Land.       -      நிலம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நிலையான நீர் மேலாண்மையானது, மக்கள், சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் அதே வேளையில், நீரின் நன்மையான பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது.


நீதிக்கதை

 ஆமை


சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றை கண்டான்.அதனை மெதுவாக தொட்டவுடன் ஆமை தனது தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.


 சிறுவன் என்னென்னவோ செய்து பார்த்தும் ஆமை தனது தலையையும், கால்களையும் வெளியில் நீட்டவே இல்லை.


அதை பார்த்த சிறுவன் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ஆமையை நெருங்கினான். அப்பொழுது சிறுவனுடைய மாமா, "தம்பி நீ என்னதான் தொந்தரவு செய்தாலும் ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே 


நீட்டவே நீட்டாது" என்று கூறினார்.


சிறுவன், "ஆமையை பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. அதனை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது என்று கூறுங்கள்" என்று  கேட்டான்.


 உடனே மாமா, " தம்பி ஆமையை மெதுவாக எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதகதப்பான ஒரு இடத்தில் வை.எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் இருந்தால், ஆமை தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்ல தொடங்கும்"என்று கூறினார்.


சிறுவனும் அதே போல் செய்ய ஆமையும் ஓட்டை விட்டு வெளியே வந்து ஊர்ந்ததை பார்த்து சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.


ஆச்சரியம் அடைந்த சிறுவன் இது எப்படி என்று தனது மாமாவிடம் கேட்டான். அதற்கு அவனுடைய மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் இப்படித்தான்" என்றாராம். 


மேலும்,"உன்னை சுற்றி இருப்பவர்களை மாற்ற விரும்பினால், நீ உன்னுடைய இன்முகத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். உன் கனிவான இரக்கம் கொண்ட இதயத்தால் மட்டுமே மற்றவர்களை மாற்ற இயலும்" என்றும் கூறினார்.





Comments

Popular posts from this blog

LMS -TRAINING BASE & END LINE ASSESSMENT QUESTIONS & ANSWER