Songs

Wednesday, April 2, 2025

03-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:963


பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


 பொருள்: செல்வம் பெருகும் போது அடக்கம் வேண்டும். செய்வம் குறையும் போது இழிவற்ற பெருமிதம் வேண்டும்.


பழமொழி :

தருமமே தலை காக்கும். 


Charity guards the head.


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.


* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :


இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.---மாவீரன் நெப்போலியன்


பொது அறிவு : 


1. நிலவில் விளையாடிய முதல் விளையாட்டு எது? 


விடை : கோல்ப்.  


2. அடிடாஸ் எந்த நாட்டின் நிறுவனம்? 


விடை : ஜெர்மனி


English words & meanings :


Mud.    -    சேறு

 

Ocean.    -   பெருங்கடல்/சமுத்திரம் 


வேளாண்மையும் வாழ்வும் : 


நீர் வளத்திற்கான தேவை மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது. 


நீதிக்கதை

 ஆணவம் அழிந்தது 


போரில் வெற்றி பெற்ற  மன்னர் ஆணவம் கொண்டார் . தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால்  மன்னரின் ஆணவம் அதிகரித்தது.


அதன் முடிவாக பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார். ஒருநாள் அரண்மனைக்கு வந்த துறவியை பார்த்து, "என்ன எருமை மாடு போல் நடந்து வருகிறீர்களே?"   எனக் கூறி சிரித்தார்.


துறவி சற்றும் கலங்கவில்லை.


மாறாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தபடியே, "நான் வணங்கும் கடவுளான புத்தரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தார்.


தான் இகழ்ந்து பேசினாலும் தன் மீது கோபம் கொள்ளாத துறவியை பார்த்து மன்னர் வியந்தார்.


 மன்னர் துறவியிடம், "நான் உங்களை இகழ்ந்து பேசியும் நீங்கள் என்னை புத்தர் என்று கூறுகிறீர்களே! ஏன்?"என்று கேட்டார்.


அதற்கு துறவி,"மன்னரே! நமது உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பார்கள். எனது உள்ளத்தில் புத்தர்  இருப்பதால் எங்கும் புத்தமயமாகவே காட்சியளிக்கிறது.அதைப்போல தாங்களும் சிந்தித்தால் தமக்கே புரியும் "என்று கூறினார்.


 மேலும், துறவி,"இந்த உலகில்  தாழ்ந்தவரோ உயர்ந்தவரோ எவரும் இல்லை" என்றார் துறவியின் பேச்சைக் கேட்ட மன்னர் உண்மை விளங்கி தனது ஆணவத்தை கைவிட்டார்.



இன்றைய செய்திகள் - 03.04.2025


* விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


* இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் நேற்று முழு கடையடைப்பு.


* தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.


* திருநங்கைகளுக்காக நாடு முழுவதும் 18 இல்லங்கள்: மத்திய அரசு தகவல்.


* இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.


* சென்னையில் நேற்று முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.


Today's Headlines


*During the 3rd phase of the excavation in Vembakottai at Virudhunagar district many valuable artifacts were found already. Now they found a small golden ball in 2.04 metre depth.


*There is bundh in Nilgiris district yesterday, urging authorities to cancel the e-pass practice.


*Heavy rains are likely to occur for four days in Tamil Nadu. Prediction by India Metrological department 


*18 Homes across the country for transgender people: Central Government Information.


*US President Donald Trump is reportedly engaged in a serious consultation on 100% tax on India's agricultural products.


*Tickets for the match between Chennai Super Kings and Delhi Capitals started in the IPL cricket match.


*The first Sabha Club men basketball tournament will be held in Chennai from yesterday to 7th




No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...