அரையாண்டுப்பொதுத்தேர்வு-2024,
மதுரை மாவட்டம்
மனப்பாடப் பாடல்கள் காணொளி வடிவில்
Please click and see video
Please click and hear and see video
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
1.ஈ. சருகும் சண்டும்
2.ஆ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல
3.ஆ. நற்றிணை
4.இ. பால் வழுவமைதி
5.ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்
6.அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
7.இ. மார்கழி, தை
8.ஈ. சிலப்பதிகாரம்
9.அ.அகவற்பா
10.ஆ. அதியன், பெருஞ்சாத்தன்
11.இ. காடு, வாட
12.அ. சிலப்பதிகாரம்
13.ஈ. பகர்வணர், பட்டினும்
14.இ. நெய்பவர்
15.ஆ. ஆரமும் அகிலும்
- எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
16.அ.அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது யாருடைய கருத்தாக இருந்தது?
ஆ. 2010 ஆம் ஆண்டு கோவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் யார் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்?
17. காலையிலேயே மாலையும் வந்துவிட்டது (மாலைப்பொழுதையும் பூவையும் குறித்தது)
18 இயந்திரமனிதன், செயற்கைக்கோள்
19.வெட்சி-கரந்தை வஞ்சி-காஞ்சி,நொச்சி-உழிஞை
20.அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்
21 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
22.அ.காற்று ஆ.காடு
23 அ.தோட்டினைத் தொட்டான் ஆ. பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றான்
24.அ. இன்னாசிரியார். புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்து, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
ஆ. ஒடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சுத் தடைப்பட்டது
25.அ.நவீன இலக்கியம் ஆ.மனிதநேயம்
26.அ.கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள்.
ஆ. அழகன் படிக்காமல் தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான்
27அ.புதுகை ஆ. மயிலை
28.ஒலித்து ஒலி +த்+த்+உ
ஒலி - பகுதி:
த் -சந்தி:
த்- இறந்தகால இடைநிலை:
வினையெச்ச விகுதி 2
பிரிவு-1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
29.வீட்டின் முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப்படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை. குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது.
30.தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்
மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்
2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்
இரவலர்களைத் தேடி வரவழைத்தல் ஆ. அதியன் இ. மறுமை நோக்கிக் கொடுக்காதவன்
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
32 .மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.
நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.
அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்றுகுலசேகராழ்வார் கூறுகிறார்.
33.குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.
இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்
இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.
தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
Please click and see video
34.அ. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
.மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!
நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
Please click and see you video
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
நவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.
பிரிவு-3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
35✓ மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
✓பூங்கொடி- அன்மொழித்தொகை
✓ குடிநீர் - வினைத்தொகை
ஆடுமாடு -உம்மைத்தொகை
மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
36.நிரல்நிரையணி. சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.
37 சீர் அசை. வாய்பாடு
உலகத்தோ. நிரை+நேர்+நேர். புளிமாங்காய்
டொட்ட. நேர்+நேர். தேமா
ஒழுகல். நிரை+நேர். புளிமா
பலகற்றும். நிரை+நேர்+நேர் புளிமாங்காய்
கல்லார். நேர்+நேர். தேமா
அறிவிலா. நிரை+நிரை. கருவிளம்
தார். நேர். . நாள்
பகுதி-4
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
38.மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:
அ. கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.
அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும் உள்ளது.
திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.
அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.
பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:
ஆ)
39
1)அழகான அன்னை மொழி
பழமையான நறுங்கனி
பாண்டியன் மகள்
சிறந்த நூல்களை உடைய மொழி
பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.
✓ மெய்க்கீர்த்திப் பாடல் சொல் நயம் . பொருள் நயம் மிக்கது
இரண்டாம் இராசராசன் கருணையுடன் ஆட்சி செய்தான்
மக்கள் அனைத்து நற்பண்புகளிலும் சிறந்து விளங்கினர்
கல்வியில் சிறந்து விளங்கினர்.
அவனது நாட்டில் எவ்வித குற்றங்களும் நடைபெறவில்லை.
மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர்.
அ.
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தர மற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக
புகார்க் கடிதம்
மதுரை
12-08-20
அனுப்புதல்
தமிழரசன்
த/பெ அன்பழகன்
கோவலன் தெரு
மதுரை
பெறுதல்
ஆணையாளர்,
உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகம்,
மதுரை
ஐயா,
பொருள்: மதுரை.. விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமின்மை, பராமரிப்புச் சார்ந்த புகார்.
மதுரை மாநகரில்... என்னும் புகழ் பெற்ற உணவு விடுதி பல ஆண்டுகளாய்ச் செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை மதியம் உணவுக்காக நானும் என் குடும்பத்தினரும் விருந்தினர்களும் மதிய உணவருந்தச் சென்றோம். அனைவருக்கும் (15 செலுத்தி இரசீதும் பெற்றிருந்தேன். இணைக்கப்பட்டுள்ளது) அங்குச் உணவுக்கும் பணம் பேர்களுக்கும்) சிறப்பு சால்விகள் குடும்பத்தோடு விளையாடிக்கொண்டிருந்தன. உணவருந்துமிடத்திலும் மிகுதியாய்க் காப்பான் பூச்சிகள் கழுவும் சுகாதார பேய்ந்துகொண்டிருந்தன. சாம்பார், மோர், கூட்டு போன்றவற்றில் கெட்டுப்போன நாற்றம் எழுந்தது. இலையறி நான் விடுதிக் கண்காணிப்பாளரிடம் கூறினேன். அவர் கோபமாகவும், தரக்குறைவாயும் பேசினார். இவற்றை எங்கள் உறவினர், செல்லில் பதிவு செய்துள்ளார். மேலும், யின் CCTV காமிராவில் இவை பதிலாகியிருக்கும். நான் விடுதியிலிருந்து புறப்பட்ட போது, காரா முன் நின்று புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற காலாவதியான தரமில்லாத உணவுகளை உண்டதால் நாங்கள் மருத்துவரிடம் சென்று உணவு ஒவ்வாமைக்கு மருத்துவம் பார்க்க நுந்துள்ளது. இதற்கான சான்றையும் நகலையும் இதனுடன் இணைத்துள்ளேன்.
என் புகார்களை ஏற்று, மேற்படி விடுதி நிருவாகத்தினர்மீது நடவடிக்கை எடுக்குமாறு நட்டுக்கொள்கிறேன்
இங்ஙனம்,
தமிழரசன்
இணைப்பு
உணவுக்குச் செலுத்திய பணம் குறித்த இரசீது செல்போனில் எடுத்த படங்கள
உறைமேல் முகவரி
பெறுநர்
ஆணையாளர், உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர். மதுரை
ஆ)
பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும்பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
05-12-2024
மதுரை
அன்புள்ள மாமா அவர்களுக்கு,
வணக்கம். இங்கு அப்பா, அம்மா, அண்ணா, பாட்டி அனைவரும் நலமாய் இருக்கிறோம். அங்கு உங்களின் நலமோடு அத்தை, மணிவண்ணன், மகாலட்சுமி ஆகியோரின் நலமும் அறிய ஆவல். ஒரு மகிழ்வான நிகழ்வினை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம் எழுதுகிறேன்.
சென்ற புதன்கிழமையன்று மாலையில் எங்கள் பள்ளி விளையாட்டுத்திடலில் விளையாடிவிட்டுத் திரும்பினேன். அப்போது ஒரு துணிப்பை அங்கே கிடந்தது; எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே கட்டுக்கட்டாய்ப் பணமும் ஒரு கைபேசியும் இருந்தன. எனக்கு பயமுண்டாகிவிட்டது. நேராகத் தலைமையாசிரியர் அறைக்குச் சென்று, நடந்ததை அவரிடம் கூறிப் பையைக் கொடுத்தேன்.
மறுநாள் காலையில் பள்ளியில் இறைவணக்க நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அப்போது தலைமையாசிரியர் எனது செயலைக் குறிப்பிட்டு என்னை மேடையில் நிற்கவைத்துப் பாராட்டினார். ஆசிரியர்களும் மாணவர்களும் என் செயலைப் பாராட்டிக் கையொலி செய்து மகிழ்வித்தனர். பணத்திற்கு உரியோர் அடையாளம் கூறிப் பெற்றுச் சென்றார். எங்கள் ஊர்த்தலைவர். காவல்துறை துணை ஆய்வாளர் போன்றோர் பள்ளிக்கு வந்து, என்னைப் பாராட்டிச் சென்றனர். இதனைக் கண்ட அம்மா, அப்பா, பாட்டி எல்லோரும் மகிழ்ந்தனர். மூன்று நாள்களாய் நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மகிழ்வை உங்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். கோடை விடுமுறையில் சென்னை வருகிறேன். வணக்கம்.
அன்புடன்,
தமிழரசன்
உறைமேல் முகவரி
திரு. பாலா,13, தென்றல் காலனி, 3ஆவது தெரு, சென்னை
40
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.
மரங்கள் விழுந்தன கண்ணீர் கசிந்து,
மறைந்த வேர்களின் கதைகள் சொல்லாமல்,
மாணவர்கள் அமர்ந்தனர் அதன் மேல் சாய்ந்து.
வெட்டிய மரத்தின் மீது அமர்ந்து
பாடம் கேட்கிறார்கள் மாணவர்கள்
பாடத் தலைப்போ மரத்தை பாதுகாப்பது பற்றி
மரம் பேசியது
ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா
இன்னும் பாடம் நடத்தி என்ன பயன்
என்னை வளர விடு.....
நான் மழையை தருவேன்
வெட்டிய மரங்களின் மௌனத்தைக் கேளுங்கள்,
அதன் துயரக் குரலை செவிமடுக்க முயலுங்கள்,
மண்ணின் உள்ளம் அன்பே நிறைந்தது,
அதை அழிக்காமல் வாழ்வை அமைப்பது.
ஆலமரத்தின் கீழ் தேடும் சாந்தியும்,
அதன் உயிர் சுரக்கும் மூலமும்,
மறவாதீர்கள், அது வெறும் ஓவியமல்ல,
நம் வாழ்வின் மூலதனம் என்பதைக் கொள்ள.
41 படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
42
1. குழு விளையாட்டுகள் விளையாடுதல்.
2. உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல்.
3. விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.
4. நூல்களைப் படித்தல்,
5. திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.
அல்லது
திறன்பேசியின் அடிமையான தங்கையை நெறிப்படுத்த சில படிகளை நீ எடுத்திருக்கலாம். இது நெருக்கமான முறையில் செய்ய வேண்டிய விஷயமாகும், அன்பும் கவனமும் அடிப்படையாக இருக்க வேண்டும். இதோ சில முயற்சிகள்:
-
விளைவுகளைப் புரியவைத்தல்
- திறன்பேசியின்过多மாக்கலைப் பற்றிய உடல் மற்றும் மன ஆரோக்கிய விளைவுகளைச் சொல். உதாரணமாக, தூக்கமின்மை, மனஅழுத்தம், அல்லது பார்வை பிரச்சினைகள்.
-
மாற்றாகவே நேரத்தைச் செலவிடுதல்
- அநேக நேரத்தை திறன்பேசியில் செலவிடாமல், குடும்ப பேச்சுக்கள், விளையாட்டுகள், அல்லது புத்தகங்களைப் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வாருங்கள்.
-
காலக் கட்டுப்பாடுகள் அமல்படுத்துதல்
- தினசரி அல்லது வாராந்திர திறன்பேசி பயன்பாட்டுக்கு நேரக் கட்டுப்பாடுகளை அமைத்தல். சில செயலிகளுக்கு இந்த கட்டுப்பாடுகளை அமைக்க உதவும் திரவியங்கள் உள்ளன.
-
தனிப்பட்ட பேச்சு
- தனிப்பட்ட முறையில் பேசிப் பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்து கொள். உள் உணர்ச்சிகளைக் கேட்டறிந்து மன அழுத்தம் அல்லது சலிப்பு காரணமாக இருக்கிறதா என்று ஆராய்க.
-
மாதிரியாக இருத்தல்
- உன் செயல்பாடுகள் மற்றவர்களிடம் மிகுந்த தாக்கம் செலுத்தும். நீயும் திறன்பேசியை குறைவாக பயன்படுத்தி, நேரத்தை பயனுள்ள செயல்களில் செலவிட ஒரு மாதிரியாக இரு.
-
துணிகர பரிந்துரைகள்
- ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் ஒன்றாகத் திறன்பேசியைத் தூரமாக வைத்துவிட்டு, "டிஜிட்டல் டிடாக்ஸ்" (Digital Detox) செய்ய முயற்சி செய்யலாம்.
-
பயனுள்ள செயலிகளை அறிவுரைசொல்லுதல்
- திறன்பேசியை அனாவசிய விளையாட்டுகளுக்குப் பதிலாக கல்வி அல்லது சுவாரஸ்யமான செயலிகளுக்குப் பயன்படுத்த அறிவுரை கூறு.
இவை நெருக்கமான அன்பு, பொறுமை மற்றும் ஒருவரின் தனித்திறனுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட வேண்டும்.
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.
பகுதி-5
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:
43
செற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.
மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.
வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.
மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.
பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும்.
ஆ) முன்னுரை:
பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்:
தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார்.
பேச்சுக் கலைஞர்:
பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார்.
சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். *
நாடகக் கலைஞர்:
தமிழ்ப்பொழில்
கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் "கலைஞர் " என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது.
திரைக்கலைஞர்:
எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார்.
இயற்றமிழ்க் கலைஞர்:
கலைஞர் வெளிப்படுத்தினார். சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை
முடிவுரை:
தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.
44
அ. கோபல்லபுரத்து மக்கள்
முன்னுரை:
கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்:
சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்" குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?" என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.
இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:
அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை "மடக் மடக்" என்று உறிஞ்சிக் குடித்தான்.
அன்னமய்யாவின் மனநிறைவு:
புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.
அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:
இளைஞன்," உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டான். அதற்கு" அன்னமய்யா" என்றார். "எவ்வளவு நினைத்துக் கொண்டான். பொருத்தமான பெயர்?" என்று தன் மனதிற்குள்
முடிவுரை:
அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.
ஆ.வீரப்பனும்,ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)
முன்னுரை:
யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்.கு.அழகிரிசாமி தனது ஒருவன் இருக்கிறான்" என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும்,
காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள்.
நோயுற்ற குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.
ஆறுமுகம்:
வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
"பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்"
பண்புடையவர்களால்தான். இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.
45
அ. முன்னுரை:
உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை
இக்கட்டுரையில் காண்போம்.
முச்சங்கம்:
பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.
சிற்றிலக்கியங்கள்:
96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.
காலந்தோறும் தமிழ்:
சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்
பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.
முடிவுரை:
இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.
ஆ.நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும்.
விடுதலைப் போராட்ட வரலாறு:
பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர்.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:
நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள். தீண்டாமை மூடப்பழக்கங்கள், ஊழல் ஆகியவற்றிற்கு எதிரா எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.
மாணவப் பருவமும். நாட்டுப் பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.