Songs

Tuesday, January 21, 2025

22-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.01-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்:பழைமை


குறள் எண்:803


பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை?


பொருள்: பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?


பழமொழி :

A useful trade is a mine of gold

கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :  


* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  


* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :


உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும்.---அரிஸ்டாட்டில்


பொது அறிவு : 


1. Vermiculture என்பது


விடை:  மண்புழு வளர்த்தல்


2. பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி


விடை:  வெர்னியர்


English words & meanings :


 Pot-பானை,


Spoon-கரண்டி


வேளாண்மையும் வாழ்வும் : 


மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.


இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.


நீதிக்கதை

 அறிவில் சிறந்தவர் யார் ? 


விஜயநகரத்து மகாராணி அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள். 


 ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை அரச சபையில் பரீட்சித்துப் பார்ப்போம் வெல்பவருக்கே பிரதம மந்திரி பதவி” என்றார்.


மறுநாள் அரசவையில் ராயரும் மகாராணியும் கொலு வீற்றிருக்கும் போது இராயர் சபையோரை பார்த்து “நான் நேற்றிரவு அந்தப்புரத்தின் நிலா மாடத்தில் இருக்கும்போது ஒருவன் எனது மார்பில் காலால் எட்டி உதைத்து எனது முகத்தில் எச்சிலை உமிழ்ந்து விட்டான். அவனை என்ன செய்யலாம் ?” எனக் கேட்டார். 


உடனே மகாராணியால் சிபாரிசு செய்யப்பட்ட சாஸ்திர பண்டிதர் எழுந்து “உலகத்தில் ராஜாதிராஜனாக விளங்கும் தங்களை அலட்சியம் செய்து தங்கள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அவன் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், தங்கள் மார்பில் எட்டி உதைத்த அவன் கால்களையும் வெட்டி எறிய வேண்டும் !” என்றார். 


இராயர் அப்பாஜியை பார்த்து நீ என்ன சொல்கிறாய் என்றார். அதற்கு அப்பாஜி “உங்களை எட்டி உதைத்த கால்களுக்குப் பொற்சலங்கையும், தண்டை கொலுசும் போட்டு உங்கள் முகத்தில் எச்சில் உமிழ்ந்த வாயை முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும். ஏனெனில் தங்களுடைய அந்தப்புரத்தின் நிலா மாடத்துக்கு வந்து தங்கள் வீர மார்பில் எட்டி உதைத்துத் தங்கள் திருமுகத்தில் எச்சிலை உமிழக் கூடியவன் தங்களுடைய பச்சிளம் பாலகனான இளவரசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?” என்றார். 


ராயர் மனம் மகிழ்ந்து “அப்பாஜி நீ சொல்வது சரிதான்” என்றார். 


பின்பு இராணியின் பக்கம் திரும்பி “பார்த்தாயா ? யார் அறிவில் வல்லவர் என்பதை ?” எனக் கேட்பவர் போல் பார்த்தார். 


நீதி:  எப்போதும் சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.


இன்றைய செய்திகள் - 22.01.2025

* சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

* சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின்னூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார


* விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் போன்றவை கண்டெடுப்பு. இதுவரை 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுப்பு.

* இந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு ரூ.10,200 கோடிக்கு பினாகா வகை ராக்கெட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ராணுவ தளபதி தகவல்.

* உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா.



Today's Headlines

* The Electricity Board has ordered engineers to install DoD meters to measure peak-time electricity consumption in low-voltage power institutions.

* Information Technology Minister Palanivel Thiagarajan has said that 12 crore people have visited the Tamil digital library, which contains 1 lakh books, including Sangam literature.

* A clay jar, a clay seal, a conch bracelet, etc. were found in the 3rd phase of excavation at Vembakottai near Virudhunagar. 3,210 items have been found so far.

* The Army Commander informed that Pinaka-type rockets will be purchased for the army for Rs. 10,200 crore this financial year.

* Donald Trump, who took office as the country's president, has issued several drastic orders, including the US's withdrawal from the World Health Organization and the Paris Climate Agreement.

* Indonesia Masters badminton tournament: India's Satwik-Chirag pair advance to 2nd round.

* Belarusian Aryna Sabalenka advances to semifinals at Australian Open.




Monday, January 20, 2025

21-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.1.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்:பழைமை 


குறள் எண்:802


 நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு

 உப்புஆதல் சான்றோர் கடன்.


பொருள்:நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.


பழமொழி :

Anger is sworn enemy .


 தீராக் கோபம் போராய் முடியும்.


இரண்டொழுக்க பண்புகள் :  


* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  


* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :


சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே!  இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ..!-----விவேகானந்தர்


பொது அறிவு : 


1. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது ?    


விடை :  உருளைக்கிழங்கு.    


2. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?   


விடை :  ரோமானியர்கள்


English words & meanings :


 Knife-கத்தி,


Plate-தட்டு



வேளாண்மையும் வாழ்வும் : 


 பசுமைப் புரட்சிக் காலத்தில் உணவு உற்பத்தியின் பிரமாண்டமான வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக பாசன வசதிகளின் விரிவாக்கம் இருந்தது.


நீதிக்கதை


 குறையா நிறையா?


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு  நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.


குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.


"பானையே!நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்குமுன்னமே தெரியும். அதனால் தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"


இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக்கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது



இன்றைய செய்திகள் - 21.01.2025


* புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


* தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் 136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


* ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வது ஆபத்தானது என்று ஐஎம்ஏ புதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


* மக்களின் நம்பிக்கையை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஓர் இடம் பின்னடவைக் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளது.


* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: டெல்லி அணியை வீழ்த்தி கலிங்கா லான்சர்ஸ் வெற்றி.


* கோ கோ உலக கோப்பை போட்டி: ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.


Today's Headlines


🌸With the completion of the new Pampan railway bridge, the railway administration has decided to remove the 111-year-old Pampan railway suspension bridge from the sea.


🌸According to the Tamil Nadu government's translation subsidy scheme, 136 Tamil books are being translated into other languages.


🌸IMA's new president has warned that Ayurvedic and homeopathic doctors prescribing English medicines is dangerous.


🌸In the list of countries that have gained people's trust, India has fallen one place and is ranked 3rd.


🌸Hockey India League: Kalinga Lancers beat Delhi


🌸Kho Kho World Cup: India won the champion title in both men's and women's categories




Sunday, January 19, 2025

20-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்:பழைமை


குறள் எண்:801


பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்

 கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


பொருள்:பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.


பழமொழி :

Abused patience turns to fury.


 சாது மிரண்டால் காடு கொள்ளாது.


இரண்டொழுக்க பண்புகள் :  


* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  


* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :


உங்களின் பணிவு தான் உங்கள் முன்னேற்றமாக மாறும்.-,---ரமணர்


பொது அறிவு 


1. மனிதனின் எந்த உறுப்பில் அதிகளவு பாக்டீரியாக்கள் வாழுகின்றன?  


விடை :  நாக்கு.                   


2.  இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அருவி எது?  


 விடை : ஒகேனக்கல்


English words & meanings :


 Jar-ஜாடி,


Jug-கூஜா


வேளாண்மையும் வாழ்வும் : 



வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது




நீதிக்கதை


 தெனாலிராமன் பூனை வளர்த்தது 


விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார். 


தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான். 


குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.


கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.


அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.


அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.

பாலைக் கண்டதுமே அந்தப் பூனை ஓட்டமெடுத்தது.  அது சூடுகண்ட பூனை பாலைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கிறது!” 

என்றார்.

தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் பாலுணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான். 


இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.



இன்றைய செய்திகள் - 20.01.2025


* மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.


* “தமிழக நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது; மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கடன் சுமை” - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.


* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


* அமெரிக்காவில் அமலுக்கு வந்தது டிக்டாக் தடை: பிளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி; காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.


* ஆக்கி இந்தியா லீக்: கோனாசிகா அணியை வீழ்த்தி உ.பி.ருத்ராஸ் வெற்றி.


Today's Headlines


*  Rains increase water flow to Chennai drinking water lakes from catchment areas.


* “Tamil Nadu’s financial situation is under control; debt burden due to non-allocation of funds by the central government” - Minister Thangam Tennarasu informs.


* It has been reported that the budget session of Parliament will begin on January 31 and the central budget will be presented on February 1.


* TikTok ban implemented in the US: Removed from Play Store as well.


* Australian Open tennis tournament; Djokovic advances to the quarterfinals.


* Hockey India League: UP Rudras defeats Konasika team to win



Prepared by








Friday, January 17, 2025

உங்களுக்கு தெரியுமா எட்டாவது ஊதிய குழுவில் சம்பளம் எவ்வளவு உயரம் என்று....

Please click



 கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க.. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

1947 முதல் 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016 இல் 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டது.

7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம்.01.01. 2026 இல் முடிவடைவதால், 8-வது ஊதியக் குழுவுக்கான செயல்முறை 2025 இல் தொடங்குவதன் மூலம் அது குறித்த பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் முடியும்.

கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி  நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல்.

-மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்.

The Staff Side of the National Council ( JCM ) , representing the Central Governmem Employees ' in the country submits the undernoted significant issues / demands of the Central Government for your for kind consideration and including same in the Union Budget 2025-2026

8TH PAY COMMISSION, COVID -ARRIER.pdf 

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...