Songs

Wednesday, February 12, 2025

13-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம் தீ நட்பு


குறள் எண்:814


அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.


பொருள்:போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை

போன்றவரின் உறவைவிட, நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.


பழமொழி :


Anybody can make history.


எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


உண்மையை மறைக்க முனைவது, விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான் - கலைஞர் கருணாநிதி


பொது அறிவு : 


1. சூடான கிரகம் எது? 


விடை: புதன்


2. காற்று இல்லாத கிரகம் எது? 


விடை: புதன்


English words & meanings :


 Sesame Seed-எள்


Turmeric-மஞ்சள்


வேளாண்மையும் வாழ்வும் : 


இனி இயற்கை வேளாண்மையில் எவ்வாறு களைகளை கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

நீதிக்கதை

 தெரு நாய் 


தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று வழி தவறிப்போய் அரண்மனைக்குள் நுழைந்தது.


 ஒரு அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி. அங்கே அதைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான நாய்கள் இருந்தன இந்த நாய் சற்று எரிச்சல் அடைந்து உர்... உர்...என்றது.அந்த நூறு நாய்களும் பதிலுக்கு உர்... உர்...என்றது. 


இந்த தெரு நாய் சற்று பயந்து விட்டது. இருந்தும்  சற்று கோபத்துடன் லொள்.. லொள்... என்று குரைத்தது.எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தன. இந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.


தெரு நாய் வெறி பிடித்ததைப் போல தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது. அந்த நாய்களும் அதே போல் குரைக்க ஆரம்பித்தன.  இந்த தெரு நாய் பயத்தின் உச்சத்தில் வெறி பிடித்ததைப் போல   கத்திக் கொண்டே மயங்கியது.


நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அது புரிந்து இருக்கும் தன்னை சுற்றியுள்ளவை தன்னுடைய பிம்பங்கள் தான்  வேறு நாய்கள் அல்ல என்பது.


நீதி :  இந்த உலகம் கண்ணாடி போன்றது. நீ கோபப்பட்டால்  பதிலுக்கு கோபம்  கிடைக்கும்.


நீ  அன்பை செலுத்தினால் உனக்கு அன்பு கிடைக்கும்.

இன்றைய செய்திகள் - 13.02.2025

* தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார்.



* சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் கூடுதல் இருக்கை....ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை.




* பாண்டிச்சேரியில் Heritage Car Rally 2025 – சுதந்திரத்திற்கு முன்பிருந்த பண்டைய கார்கள் முதல் ‘90களின் இளமை வரை!அணிவகுத்த வின்டேஜ் கார்கள்! - முதலமைச்சர், ஆளுநர் சிறப்பித்த பாரம்பரிய கார் விழா! ஆச்சர்யத்துடன் மக்கள்கண்டு ரசித்தனர்.



* சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கான அறிவிப்பை நாசா வெளியிட்டது



* இங்கிலாந்துக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.



Today's Headlines

* Tamil Nadu Finance, Environment and Climate Change Minister Thangam Thennarasu submitted a request to Union Environment, Forest and Climate Change Minister Bhupender Yadav for financial assistance for Tamil Nadu's projects.



* Additional seats at Chennai Central Suburban Railway Station....Railway Administration takes action!




* Heritage Car Rally 2025 in Pondicherry - From ancient cars from before independence to the youth of the '90s! Vintage cars paraded! - Heritage car festival celebrated by the Chief Minister and Governor! People watched in amazement.



* Sunitha Williams and Butch Wilmore, who are stranded at the International Space Station, are expected to return to Earth by mid-March. NASA made an announcement to this effect



* The Indian team won the 3rd and final ODI against England and won the series 3-0





இன்றைய தங்கத்தின் விலை அறிய


https://www.goodreturns.in/gold-rates/ 

Click above link

Tuesday, February 11, 2025

12-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு 

குறள் எண்:813


 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

 கொள்வாரும் கள்வரும் நேர்.


பொருள்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்."


பழமொழி :


"A light heart lives long. 


மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் - ஐன்ஸ்டீன்.


பொது அறிவு : 


1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?


 வெள்ளி .


 2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ?


 லைகா.


English words & meanings :


 Pepper-மிளகு,


Poppy Seed-கச கசா


வேளாண்மையும் வாழ்வும் : 


விவசாயம் சார்ந்த கால்நடை வளர்க்கும் பண்ணைகள் முயல் மசால், வேலிமசால் போன்ற தழைச் சத்தை வெளியிடும் கால்நடைத் தீவனப் பயிர்களைப் பயிரிடுவதாலும் மண்ணின் வளம் அதிகரிக்க உதவுகின்றன.


நீதிக்கதை


தன்வினை தன்னைச் சுடும் 


அது ஒரு கடும் குளிர்கால காலைப்பொழுது காடு முழுவதும் பனி பெய்திருந்தது. எல்லா இடங்களுமே அடர்த்தியாக பெய்திருந்த பனியால் பளிச்சென்று வெண்மையாக காட்சியளித்தன. எல்லா பறவைகளும், விலங்குகளும் தம் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தன. எதற்குமே இறை கிடைக்கவில்லை பசியோடு இருந்தன. மேலும் வெளியே மிகக் குளிராக இருந்ததால் அவை உள்ளேயே முடங்கி கிடந்தன.


ஆனால் அவற்றுள் ஒரு பிராணிக்கு தூக்கமே வரவில்லை. அது ஒரு வெட்டுக்கிளி. அதிகமாக சத்தம் எழுப்பும் பிராணி அது. எல்லா உயிரினங்களுமே தூங்கிக்  கொண்டிருந்ததால் அதற்கு பொழுது போகவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க அது விரும்பியது.


வெளியே வந்தவுடன் காடு முழுவதும் வெண்மையாக இருப்பதைக் கண்டது.


தூங்குபவர்களை  எல்லாம் எழுப்ப எண்ணி, சத்தமாக பாடத் தொடங்கியது. தன் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து பாட்டுக்கு தாளம் போட்டு உல்லாசமாக இருந்தது.


அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பொந்தில் ஓர் ஆந்தை வாழ்ந்து வந்தது. கடும் குளிராக இருந்ததால் இத்தனை நாட்களாக அது தூங்கிக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளியின் சத்தமான பாட்டை கேட்டு ஆந்தை கண் விழித்தது. “யார் இந்த சத்தமாக பாடும் பிராணி, என் குளிர்கால தூக்கத்துக்கு இடையூறாக இருப்பது?” என்று ஆந்தை தனக்குள் கேட்டுக் கொண்டது.


பொந்திலிருந்து தலையை நீட்டி ஆந்தை வெளியே பார்த்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தவாறு வெட்டுக்கிளி ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. தன் தூக்கத்திற்கு இடையூறு செய்த வெட்டுக்கிளி மீது ஆந்தைக்கு கடும் கோபம் ஏற்பட்டது. 


பாடிக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளியை சத்தமில்லாமல் ஆந்தை நெருங்கியது. தன்னுடைய அலகால் அந்த முட்டாள் வெட்டுக் கிளியை பிடித்தது.


 எல்லா பிராணிகளைப் போல வெட்டுக்கிளியும் தன் இருப்பிடத்திலேயே குளிர்காலம் முழுவதும் இருந்திருந்தால் அனாவசியமாக பிடிபட்டு இருக்காது.


இன்றைய செய்திகள் : 12.02.2025

 மாநிலச்செய்தி:

தமிழ் நாடு மின்வாரியத்துக்கு உள்ளாட்சி அமை ப்புகள், பிற அரசு துறைகள் 

ரூ.7,351 கோடி மின்கட்டண பாக்கி

உள் நாட்டுசெய்தி:

முதல்வர் பிநரன்சிங் ராஜினா மா மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி

உலக செய்தி:

 மெக்சிகோ வளைகுடா வை அமெ ரிக்க வளைகுடா’ என பெயர்  மாற்றிய 

டிரம்ப்: விமானத்தில் பறந்து கொண்டே உத்தரவு.

விளையாட்டுச் செய்தி:

ஏபிஎன் ஆம்நரா டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸ்திரேலிய வீரரை

வென்றார்.


Today's News: 12.02.2025


 State News:


Local bodies, other government departments owe Tamil Nadu Electricity Board Rs. 7,351 crore in electricity bills


Domestic News:


Chief Minister Pinarayi Singh resigns, President's rule in Manipur


World News:


 Trump renames Gulf of Mexico as 'Gulf of America': Orders while flying in plane.


Sports News:


ABN Amnara Tennis Alcaraz Champion: Beats Australian player


.






Friday, February 7, 2025

10-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:811


பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை

பெருகலின் குன்றல் இனிது.


பொருள்:அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின்

நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.


பழமொழி :

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை     


Distance lends enchantment to the view


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. - சுப்பிரமணிய பாரதியார்


பொது அறிவு : 


1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி

விடை: சோனார். 


2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை

விடை : நீர் ஆற்றல்


English words & meanings :


Ginger-இஞ்சி,


Cardamom-ஏலக்காய் 


வேளாண்மையும் வாழ்வும் : 


பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிரும் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள தழைச் சத்தை மண்ணில் அதிகரிக்கும்.


நீதிக்கதை

 ரகசியம் 


ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அந்த துறவிக்கு யார் என்ன அவமானப்படுத்தினாலும் கோபமே வராது. அவருடைய சிஷ்யருக்கு அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார்.


 ஒருநாள் குருவிடம் சென்று, குருவே! யார் என்ன அவமானப்படுத்தினாலும் தங்களுக்கு கோபமே வருவதில்லையே ஏன்? அந்த ரகசியம் என்ன என்னிடம் கூறுங்கள்" என்று கேட்டார்.


அதற்கு குரு, " ஏரியில் உள்ள காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம்.ஒரு நாள் அவ்வாறு தியானம் செய்யும்பொழுது என்னுடைய படகை மற்றொரு படகு வந்து முட்டியது.


இப்படி யார் அஜாக்கிரதையாக வந்து முட்டியது? என்று மிகவும் கோபத்துடன்   கண்களைத் திறந்து பார்த்தால், அது வெற்று படகு. காற்றினால் அசைந்து அசைந்து வந்து என்னுடைய படகின் மீது முட்டி இருக்கிறது.என் கோபத்தினை அந்த வெற்று படகின் மீது காட்டி என்ன பயன்? 


அதுபோல் தற்போது என்னை யாராவது கோபப்படுத்தினால் அந்த வெற்றுப் படகின் ஞாபகம் தான் எனக்கு வரும்.இதுவும் வெற்று படகு தான் என்று அமைதியாக இருந்து விடுவேன்". என்று தனது ரகசியத்தை விளக்கிக் கூறினார்.


இன்றைய செய்திகள்

10.02.2025

* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.

* தேசிய விளையாட்டுப் போட்டி:  போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.


Today's News


10.02.2025


* 800-year-old Pandya-era inscriptions have been discovered on a hillside near Madurai.


* Transport officials have said that steps are being taken to provide bus passes to 35.12 lakh students in the coming academic year.


* ISRO successfully conducted tests of the CE20 cryogenic engine used for the Gaganyaan project at the test center in Mahendrigiri.


* ISL. Football: Chennai FC team won by defeating East Bengal.


* National Games: Tamil Nadu athlete Pavithra won gold in the pole vault competition.





Thursday, February 6, 2025

07-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:810


 விழையார் விழையப் படுப பழையார்கண்

 பண்பின் தலைப்பிரியா தார்.


பொருள்:


(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்."


பழமொழி :

தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது.   


Cleanliness is next to Godliness.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன். 


* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.


பொன்மொழி :


காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். -- ஆண்டி வார்ஹோல்


பொது அறிவு : 


1. ரத்த வெள்ளை அணுக்களின் வேறு பெயர் என்ன? 


லூக்கோசைட்ஸ்


2. ரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர் என்ன ? 


எரித்ரோசைட்ஸ்.


English words & meanings :


 Fenugreek Seed-வெந்தயம்,


Garlic-பூண்டு


வேளாண்மையும் வாழ்வும் : 


பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சத்தை  வளி மண்டலத்திலிருந்து எடுத்து பொருத்துகிற்து.


நீதிக்கதை

எலுமிச்சம் பழம்


முதல் நாள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் அடுத்த நாள், எலுமிச்சம் பழம் கொண்டு வருமாறு பேராசிரியர் கூறினார்.


 ஏன்? எலுமிச்சம்பழம் என்ற வினாவோடு மாணவர்கள் அனைவரும் எலுமிச்சம்பழம் ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தனர்.


"அவரவரின் பெயரின் முதல் எழுத்தை  எலுமிச்சம் பழத்தின் மேல் செதுக்குங்கள்" என்றார் பேராசிரியர். மாணவர்கள் செதுக்கினார்கள். ஒரு கூடை ஒன்றில்  அனைத்து பழங்களையும்  போடச் சொன்னார்.நன்றாக கலந்தார். 


பின்பு மாணவர்கள் அனைவரையும் அவரவர் பழங்களை எடுக்கச் சொன்னார். மாணவர்களும்  அவரவர் தம் முதல் எழுத்தை கொண்டு பழங்களை சரியாக எடுத்துக் கொண்டனர். 


பின்பு எலுமிச்சம் பழத்தின் தோலை அகற்றிவிட்டு கூடையில் போடச் சொன்னார். மீண்டும் கலந்தார். மீண்டும் அவரவர் பழங்களை எடுக்குமாறு கூறினார்.  ஆனால் மாணவர்களால் எடுக்க  இயலவில்லை.


 அப்போது பேராசிரியர்  "தோலை நீக்கிவிட்டால் அனைத்து எலுமிச்சம் பழங்களும் ஒன்றுதான். ஆனால் அதன் சுவை எப்போதும் மாறுவது இல்லை. அதேபோலத்தான் மாணவர்களாகிய நீங்களும் எந்த  சமூக வேறுபாடுகளின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அனைவரும் மனித பண்புள்ளவர்கள்.  மனிதநேயத்தை எப்போதும் விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரும் பழக வேண்டும். இதுவே உங்களுக்கு முதல் பாடம்" என்று முடித்தார்



இன்றைய செய்திகள் - 07.02.2025


* முழு கொள்ளளவை எட்டிய பார்சன்ஸ் வேலி அணை: கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.


* பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை.


* வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 79% நிறைவு என மத்திய அமைச்சர் தகவல்.


* சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.


* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி.


Today's Headlines


* Parsons Valley Dam reaches full capacity: Ooty city will not face water shortage in summer.


* Tamil Nadu Public Health Department takes steps to keep necessary medicines in stock at primary health centres as seasonal diseases continue to affect the country at all times.


* Union Minister informs that the work of constructing a fence on the Bangladesh border is 79% completed 


* Chennai Open Tennis: Indian pairs advanced to the quarterfinals.


* First ODI cricket match: India easily defeated England



.

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...