பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: பழைமை
குறள் எண்:810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பொருள்:
(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்."
பழமொழி :
தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது.
Cleanliness is next to Godliness.
இரண்டொழுக்க பண்புகள் :
*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.
* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.
பொன்மொழி :
காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். -- ஆண்டி வார்ஹோல்
பொது அறிவு :
1. ரத்த வெள்ளை அணுக்களின் வேறு பெயர் என்ன?
லூக்கோசைட்ஸ்.
2. ரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர் என்ன ?
எரித்ரோசைட்ஸ்.
English words & meanings :
Fenugreek Seed-வெந்தயம்,
Garlic-பூண்டு
வேளாண்மையும் வாழ்வும் :
பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சத்தை வளி மண்டலத்திலிருந்து எடுத்து பொருத்துகிற்து.
நீதிக்கதை
எலுமிச்சம் பழம்
முதல் நாள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் அடுத்த நாள், எலுமிச்சம் பழம் கொண்டு வருமாறு பேராசிரியர் கூறினார்.
ஏன்? எலுமிச்சம்பழம் என்ற வினாவோடு மாணவர்கள் அனைவரும் எலுமிச்சம்பழம் ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தனர்.
"அவரவரின் பெயரின் முதல் எழுத்தை எலுமிச்சம் பழத்தின் மேல் செதுக்குங்கள்" என்றார் பேராசிரியர். மாணவர்கள் செதுக்கினார்கள். ஒரு கூடை ஒன்றில் அனைத்து பழங்களையும் போடச் சொன்னார்.நன்றாக கலந்தார்.
பின்பு மாணவர்கள் அனைவரையும் அவரவர் பழங்களை எடுக்கச் சொன்னார். மாணவர்களும் அவரவர் தம் முதல் எழுத்தை கொண்டு பழங்களை சரியாக எடுத்துக் கொண்டனர்.
பின்பு எலுமிச்சம் பழத்தின் தோலை அகற்றிவிட்டு கூடையில் போடச் சொன்னார். மீண்டும் கலந்தார். மீண்டும் அவரவர் பழங்களை எடுக்குமாறு கூறினார். ஆனால் மாணவர்களால் எடுக்க இயலவில்லை.
அப்போது பேராசிரியர் "தோலை நீக்கிவிட்டால் அனைத்து எலுமிச்சம் பழங்களும் ஒன்றுதான். ஆனால் அதன் சுவை எப்போதும் மாறுவது இல்லை. அதேபோலத்தான் மாணவர்களாகிய நீங்களும் எந்த சமூக வேறுபாடுகளின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அனைவரும் மனித பண்புள்ளவர்கள். மனிதநேயத்தை எப்போதும் விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரும் பழக வேண்டும். இதுவே உங்களுக்கு முதல் பாடம்" என்று முடித்தார்
இன்றைய செய்திகள் - 07.02.2025
* முழு கொள்ளளவை எட்டிய பார்சன்ஸ் வேலி அணை: கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
* பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை.
* வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 79% நிறைவு என மத்திய அமைச்சர் தகவல்.
* சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.
* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி.
Today's Headlines
* Parsons Valley Dam reaches full capacity: Ooty city will not face water shortage in summer.
* Tamil Nadu Public Health Department takes steps to keep necessary medicines in stock at primary health centres as seasonal diseases continue to affect the country at all times.
* Union Minister informs that the work of constructing a fence on the Bangladesh border is 79% completed
* Chennai Open Tennis: Indian pairs advanced to the quarterfinals.
* First ODI cricket match: India easily defeated England
.
No comments:
Post a Comment