Songs

Wednesday, February 5, 2025

06-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:809


 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

 விடாஅர் விழையும் உலகு.


பொருள்:உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்."


பழமொழி :

அடக்கம் ஆயிரம் பொன் தரும். 


Humility will give one thousand bucks.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :


கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு : 


1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? 


விடை : ஜேம்ஸ் வாட்.


2. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது 


விடை : 70


English words & meanings :


Cumin-சீரகம்


Curry Leaf-கறிவேப்பிலை 


வேளாண்மையும் வாழ்வும் : 


நாம் எப்படி நில மேலாண்மை செய்தால்  விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். அதில் பயிர் வளர்ச்சிக்கு முதன்மையான தழைச் சத்து சரியான நேரத்தில் சரியான அளவு கிடைக்கும் படி பார்க்க வேண்டும். 


நீதிக்கதை


சூரியனும்... குகையும்...


சூரியனும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தன. குகையால் ஒளி என்றால் என்ன? என்பதையும் என்றால் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள தெரியவில்லை. அதேபோல் சூரியனுக்கு இருட்டு என்றால் என்ன? என்றே தெரியவில்லை. 


எனவே இருவரும் தத்தமது இடத்தை மாற்றிக்கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பினர். குகை வானத்தில் ஏறி சூரியனின் இடத்திற்கு சென்றது. சூரியன், பூமிக்கு இறங்கி வந்து குகையின் இருப்பிடத்துக்குச் சென்றது. 


சூரியனின் இடத்தை தற்போது அடைத்திருந்த குகை, அருமை! வெளிச்சம் என்றால் என்ன என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவும் தெளிவாகத் தெரிகின்றன. நன் இதற்கு முன் எவ்வளவு கீழ்மையாக வாழ்த்தேன் என்பது இப்போதுதான் புரிகிறது?" என்றது குகை     குகையின் இருப்பிடத்தை அடைத்திருந்த சூரியனோ, எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றது.  


அறிவுள்ளவர்களைப் பொறுத்தவரை. அவர்கள் அறியாமை நிறைந்தவர்களின் பெரும் கூட்டத்தில் இருந்தாலும் அந்த அறியாமை அவரை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. தன்னுடைய ஞானத்தின் ஒளியில் அவர் எப்போதும் தெளிவாகவே இருப்பார். 



இன்றைய தலைப்புச் செய்திகள்!

‣ நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு. உணவு பதப்படுத்தும் கூடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கிறார

‣ குடும்பத்தினருக்கே தெரியாமல் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள். ஐரோப்பா செல்வதாகக் கூறிவிட்டு அமெரிக்காவுக்கு பயணம்.

‣ இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி. நாக்பூரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.



* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


* பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன.


* சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றி வந்த அமெரிக்க விமானம் இந்தியா வந்தடைந்தது.


* காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு.


* 38-வது தேசிய விளையாட்டு போட்டி:  பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன்  தங்கப்பதக்கம் வென்றார்.


* ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றுள்ளார்.


Today's Headlines


* Pensions with increased dearness allowance have been credited to the bank accounts of transport pensioners.


* A small piece of broken gold and a bone-pointed tool were found in the ongoing excavations at the Golden Fort.


* A US flight carrying 104 Indians who had illegally immigrated to the US has arrived in India.


* China, Saudi Arabia and Turkey strongly oppose Trump's announcement to 'capture' Gaza.


* 38th National Games: Tamil Nadu's Satish Karunakaran wins gold medal in badminton men's singles.


* India's opening player, Gongadi Trisha, has won the player of the season award in the Junior Women's T20 World Cup



‣ Chief Minister M.K. Stalin to conduct field inspection in Nellai district today. Inaugurate various projects including food processing plant

‣ Indians who have taken refuge in America without their families knowing. Travel to America after claiming to be going to Europe.

‣ First ODI between India and England. Day-night match to be played in Nagpur


No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...