Songs

Tuesday, March 11, 2025

12-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : மருந்து

குறள் எண்:941


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.


பொருள் :

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.


பழமொழி :

A true friend is the best possession.


உண்மையான நண்பனே உன்னதச் சொத்து


இரண்டொழுக்க பண்புகள் :  


  *விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும் பொழுது கவனமாக இருப்பேன்.       


*அறிமுகம் இல்லாத நபர்களோடு வெளியில் செல்ல மாட்டேன். ஆபத்தான நீர் நிலைகளில் குளிக்க போக மாட்டேன்


பொன்மொழி :


வாய்மைக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அச்சமின்மையே----ஜவஹர்லால் நேரு


பொது அறிவு 


1. பூரண ஆயுள் என்பது எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது? 


விடை: 120 ஆண்டுகள். 


2. மனித முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? 


விடை: 14 எலும்புகள்.


English words & meanings :


 Singing          -      பாடுதல்


Swimming       -      நீந்துதல்


வேளாண்மையும் வாழ்வும் : 


 தமிழகத்தில் சில இடங்களில் முற்றும் இயற்கை முறை வேளாண்மை நடத்தப்படுகிறது. அதாவது மழை பெய்த உடன் நெல் விதை விதைத்து விடுவது அதன் பிறகு அதன் களைகள் கொல்ல எந்த மருந்தும் இயற்கை களைக் கொல்லிகள் கூட உபயோகிப்பது இல்லை. இம்முறையில் பயிர் செய்யப் படும் பயிர்கள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையில் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக.


நீதிக்கதை


 கடல் எவ்வளவு பெரியது?


கடலில் வசித்து வந்த தவளை ஒரு நாள் கரைக்கு வந்தது. அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்தது.


இரண்டு தவளைகளும் சந்தித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று அறிமுகம் செய்து கொண்டது


அப்போது, “கடல் எவ்வளவு பெரிது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை. ஏனென்றால் அதற்கு கடலைப் பற்றி தெரியாது


"கடல் மிகப் பெரிது!” என்றது கடல் தவளை. “இவ்வளவு பெரிது என்று ஒரு அளவு சொல்லு” என்று கேட்டது கிணற்றுத்தவளை.


“அதாவது கடலுக்கு அளவே கிடையாது. எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது” என்ற அளவே இல்லை என்றது கடல் தவளை


“எதற்குமே ஒரு அளவு உண்டு என்பார்களே. அப்படி ஒரு அளவைக் கூறு!” என்று வற்புறுத்தியது கிணற்றுத் தவளை.


“என்னால் அப்படிக் கூறவே முடியாது, பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்,” என்று கூறியது கடல் தவளை.


கடல் தவளை கூறியதைக் கேட்டுப் பொறுமை இழந்த கிணற்றுத் தவளை, “இந்தக் கிணற்று அளவாவது இருக்குமா நீ வசிக்கும் கடல்?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.


கடல் தவளை பலமாகச் சிரித்துக் கொண்டே, என்ன சொல்லியும் உனக்குப் புரியவில்லையே! கடுகு எங்கே? மலை எங்கே? என்பது புரியாத உனக்கு எப்படி புரிய வைக்கமுடியும்?" என்று சலித்துக் கொண்டது கடல் தவளை.


உடனே கிணற்றுத் தவளைக்குக் கோபம் அதிகரித்து, “நீ ஒரு பொய்யன் கிணற்றை விட கடல் பெரிதாகவே இருக்க முடியாது” என்று கூறிவிட்டுச் சென்றது.


‘உலக நடப்புத் தெரியாதவனை கிணற்றுத் தவளை’ என்று கூறுவது வழக்கம்


இன்றைய செய்திகள் - 12.03.2025


* மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அனுமதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.


* விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


* உலகின் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்.


* சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதகால காத்திருப்புக்குப் பிறகு வரும் மார்ச் 16-ல்  விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர்.


* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: அரியானா, ஜார்கண்ட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


* சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்: சங்கக்காரா அபார சதம். இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி.


Today's Headlines


* Tamil Nadu Chief Minister Stalin has made a significant announcement for women's self-help groups, allowing them to transport their products free of cost on buses up to 100 kilometers. This move aims to support and empower women entrepreneurs in the state.


 * Heavy rain is expected in eight districts, including Virudhunagar and Sivaganga, as per the Chennai Weather Research Centre.


* India has been ranked fifth among the world's most polluted countries, according to a report by the Swiss air quality technology company.


 * Astronaut Sunita Williams and Barry Wilmore are set to return to Earth on March 16 after a nine-month stay at the International Space Station.


* The Indian senior women's hockey team has reached the finals of the National Senior Women's Hockey Championship, with Haryana and Jharkhand competing in the final


* Sri Lanka has defeated England in the International Masters League T20 series, with Sangakkara scoring a century




11-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :சூது

 குறள் எண்:935


கவறும் கழகமும் கையும் தருக்கி

 இவறியார் இல்லாகி யார்.


பொருள்:சூதாடு

கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."


பழமொழி :

வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.   


A diamond must be cut with a diamond.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.


*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :


வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை,  ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி


பொது அறிவு : 


1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது? 


விடை :  ஜெர்மனி.    


2. மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?  


விடை: நிக்கோலா டெஸ்லா 


English words & meanings :


 Cooking.  -   சமைத்தல்


Dancing.   -    நடனம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது


மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.



நீதிக்கதை


 சிட்டுக்குருவியும் காகமும் 


ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.


அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது


அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.


இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து  சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது. 


 நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை  கேட்க வேண்டும்


இன்றைய செய்திகள்

11.03.2025

* தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

* இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

* கனடா புதிய பிரதமரானார் மார்க் கார்னி: அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு பணிய மாட்டோம் என பேச்சு.

* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: காலிறுதியில் ஜார்கண்ட், மராட்டியம், மிசோரம், அரியானா அணிகள் வெற்றி.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* High Court judges have suggested that people who wanted join in Tamilnadu government jobs should know how to speak and write in Tamil in Tamil Nadu.

* In Tamil Nadu, in 2023-24, wind power installation increased by 9,015 MW and solar power capacity increased to 1,261 MW.

* Scott-1 is the world's first trading satellite to monitor the space created by Indian Start-up.It has taken the picture of South America and sent it by this it
started its operation.

* Mark Carni became the new Prime Minister of Canada: Saying  "we won't surrender ourselves for the  US mutual taxation".

* National Senior Women's Hockey Tournament: Jharkhand, Maratham, Mizoram and Haryana teams win in the quarter -finals.

* Indianwells Tennis Tournament: Progress to Jessica Begula 4th round




Monday, March 10, 2025

10-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: சான்றாண்மை


 குறள் எண்:985

 ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்

 மாற்றாரை மாற்றும் படை.


 பொருள்: காரியம் முடிப்போரது திறமை பணிந்து போதல்; அதுவே பகைவரை நண்பராக்குங் கருவி.


பழமொழி :

செய்யுள் அழகு மனதைக் கொள்ளை கொள்ளுதல்.


The charm of the poetry captivates the soul.


இரண்டொழுக்க பண்புகள் :


*  பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன். 


* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.


பொன்மொழி :


ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.


பொது அறிவு : 


1. கங்கை நதி தேசிய நதியாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?  


விடை : 2008 ஆம் ஆண்டு.      


2. மழை நீரை மட்டும் குடிக்கும் பறவை எது? 


விடை : சடக் பறவை


English words & meanings :


 Artist.    -    ஓவியர்


Assistant.    -     உதவியாளர்


வேளாண்மையும் வாழ்வும் : 


 புவியின் நீரில் சுமார் 3% மட்டுமே நன்னீர், இதில் சுமார் 1.2% மட்டுமே குடிக்கக்கூடியது (மீதமுள்ளவை பனிப்பாறைகள், பனிக்கட்டிகள், நிரந்தர உறைபனி அல்லது ஆழமான நிலத்தடியில் பிணைக்கப்பட்டுள்ளன

நீதிக்கதை


 உதவியும் ஒத்துழைப்பும்


ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி, நாம் எல்லோரும் கடப்பட்டு பொருள்களை சிரமத்தோடு கடித்து, மெல்லுகிறோம். ஆனால், இந்த நாக்குக்கு ஒரு உழைப்பும் இல்லை, சுவைத்து, உண்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. 


மேலும், நாம் பெரும்பான்மையானவர்கள். நாக்கோ சிறுபான்மை. அதனால் நாம் நம்முடைய வலிமையைக் காட்டுவதற்காக, நாக்கைக் கடித்து புண் ஆக்கிவிடுவோம், அது என்ன செய்யும் பார்க்கலாம் என்ற தீர்மானித்தன.


அதை அறிந்த நாக்கு, “அடே பற்களே! நாம் அனைவரும் மனித உடலில் உள்ள உறுப்புகள். ஒன்றுக்கொன்று உதவியுடனும், ஒத்துழைப்புடனும் இருந்து, செயல்படுவதே முறை. இதில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்வதே சிறப்பு. மீறி தகராறு செய்வீர்களானால், நான் என்ன செய்வேன் தெரியுமா? தெருவில் போய்க் கொண்டிருக்கும் ஒரு முரட்டு ஆளைப் பார்த்து, ‘அடே, முரடனே படவா!’ என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போய் விடுவேன்”. அவன் வேகமாக வந்து, முகத்தில் பல குத்துகள் விடுவான். நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒருபக்கமாக, உதிர்ந்து போய்விடுவீர்கள்” என்று எச்சரித்தது நாக்கு.


நாக்கு கூறியது உண்மைதான்! என்பதை பற்கள் உணர்ந்தன.


நீதி:ஒருவருக்கு அடுத்தவர்  உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் வாழமுடியாது


இன்றைய செய்திகள் - 10.03.2025


* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழகத்தில் 22 இடங்களில் 26,000 பெண் போலீஸாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


* 9 நகரங்களில் ரூ.72 கோடி செலவில் தோழி விடுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.


* பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் இந்தியா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.


* ‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


* 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது இந்தியா..நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines


* 26,000 female policemen have to be given skills development training in 22 places in Tamil Nadu to handle crimes against women and children.


* CM Stalin's announced to build "Thozhi Viduthikal" in 9 cities at a cost of Rs 72 crore.


* India is ranked No. 2 in women-led start-up companies.


* US President Trump has boasted that India has agreed to reduce taxes as India has taken too much tax on US goods.


* India won the Champion Trophy Cup after 12 years.India beat New Zealand by 4 wickets in hectic final




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...