Songs

Thursday, March 13, 2025

14-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம்:மருந்து

குறள் எண் :944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல

துய்க்க துவரப் பசித்து.


பொருள்:


முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.


பழமொழி :

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்


Face the danger boldly than live in fear.


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     


  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :


ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்---சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு : 


1. குழந்தைகள் உதவி எண் என்ன? 


விடை : 1098.          


2. இறந்த பிறகும் உடலில் எந்தப் பகுதி வளரும்? 


விடை: விரல் நகம்


English words & meanings :


 Climbing.       -      ஏறுதல்


 Cricket.          -    மட்டைப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் : 


 நல்ல நீரில் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனி ஆறுகளில் உறைந்திருக்கும்

நீதிக்கதை


 பூனையின் புதையல் வேட்டை 


முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது.


எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.


புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, “பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம்  பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார்கள்.


அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, “நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன். உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை” என்று சொன்னது.


அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றனர்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.


உதவிக்காக அந்தப்  பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது.  அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது” என்று சொன்னார்கள்.


பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.



இன்றைய செய்திகள் - 14.03.2025


* தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு.


* தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்.


* 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம்: தலைமை அஞ்சல்துறை தலைவர் பெருமிதம்.


* மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


* சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது.


* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு 3-வது இடம்.


* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது




Wednesday, March 12, 2025

13-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942


மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.


பழமொழி :

Many hands make work light\


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


இரண்டொழுக்க பண்புகள் :  


   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  


*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.


பொன்மொழி :


எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு : 


1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்? 


விடை: ரோமானியர்கள். 


2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?


 விடை: நியூசிலாந்து


English words & meanings :


 Archery      -      வில்வித்தை


 Badminton       -      பூப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் : 


 இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்


நீதிக்கதை


 நரியும் புலியும் 


ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான். 


முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.


நரியும்  வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது  வண்ணம் பூசு" என்றது.  அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது.  நரி தனக்குள்  “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல்  சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை. 


வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.  ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி:  பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

13.03.2025

* மின் இணைப்புகளில் பொருத்துவதற்காக ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

* “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி; அமெரிக்காவின்கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதிபெறாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு.

Today's Headlines

1. Tamil Nadu Electricity Board tenders for 3.04 crore smart meters worth ₹20,000 crores.

2. Chennai Weather Research Centre predicts moderate rain in Tamil Nadu, Puducherry, and Karaikal from March 13 to 18.

3. India and Mauritius sign 8 Memoranda of Understanding .

4. US President Donald Trump says Ukraine is ready for a temporary ceasefire and hopes Russian President Putin will agree.

5. American tennis player Coco Gauff qualifies for the 4th round of the Indian Wells International Tennis Tournament.

6. India misses out on the World Test Championship, incurring a revenue loss of ₹38 crores


Tuesday, March 11, 2025

12-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : மருந்து

குறள் எண்:941


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.


பொருள் :

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.


பழமொழி :

A true friend is the best possession.


உண்மையான நண்பனே உன்னதச் சொத்து


இரண்டொழுக்க பண்புகள் :  


  *விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும் பொழுது கவனமாக இருப்பேன்.       


*அறிமுகம் இல்லாத நபர்களோடு வெளியில் செல்ல மாட்டேன். ஆபத்தான நீர் நிலைகளில் குளிக்க போக மாட்டேன்


பொன்மொழி :


வாய்மைக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அச்சமின்மையே----ஜவஹர்லால் நேரு


பொது அறிவு 


1. பூரண ஆயுள் என்பது எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது? 


விடை: 120 ஆண்டுகள். 


2. மனித முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? 


விடை: 14 எலும்புகள்.


English words & meanings :


 Singing          -      பாடுதல்


Swimming       -      நீந்துதல்


வேளாண்மையும் வாழ்வும் : 


 தமிழகத்தில் சில இடங்களில் முற்றும் இயற்கை முறை வேளாண்மை நடத்தப்படுகிறது. அதாவது மழை பெய்த உடன் நெல் விதை விதைத்து விடுவது அதன் பிறகு அதன் களைகள் கொல்ல எந்த மருந்தும் இயற்கை களைக் கொல்லிகள் கூட உபயோகிப்பது இல்லை. இம்முறையில் பயிர் செய்யப் படும் பயிர்கள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையில் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக.


நீதிக்கதை


 கடல் எவ்வளவு பெரியது?


கடலில் வசித்து வந்த தவளை ஒரு நாள் கரைக்கு வந்தது. அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்தது.


இரண்டு தவளைகளும் சந்தித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று அறிமுகம் செய்து கொண்டது


அப்போது, “கடல் எவ்வளவு பெரிது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை. ஏனென்றால் அதற்கு கடலைப் பற்றி தெரியாது


"கடல் மிகப் பெரிது!” என்றது கடல் தவளை. “இவ்வளவு பெரிது என்று ஒரு அளவு சொல்லு” என்று கேட்டது கிணற்றுத்தவளை.


“அதாவது கடலுக்கு அளவே கிடையாது. எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது” என்ற அளவே இல்லை என்றது கடல் தவளை


“எதற்குமே ஒரு அளவு உண்டு என்பார்களே. அப்படி ஒரு அளவைக் கூறு!” என்று வற்புறுத்தியது கிணற்றுத் தவளை.


“என்னால் அப்படிக் கூறவே முடியாது, பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்,” என்று கூறியது கடல் தவளை.


கடல் தவளை கூறியதைக் கேட்டுப் பொறுமை இழந்த கிணற்றுத் தவளை, “இந்தக் கிணற்று அளவாவது இருக்குமா நீ வசிக்கும் கடல்?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.


கடல் தவளை பலமாகச் சிரித்துக் கொண்டே, என்ன சொல்லியும் உனக்குப் புரியவில்லையே! கடுகு எங்கே? மலை எங்கே? என்பது புரியாத உனக்கு எப்படி புரிய வைக்கமுடியும்?" என்று சலித்துக் கொண்டது கடல் தவளை.


உடனே கிணற்றுத் தவளைக்குக் கோபம் அதிகரித்து, “நீ ஒரு பொய்யன் கிணற்றை விட கடல் பெரிதாகவே இருக்க முடியாது” என்று கூறிவிட்டுச் சென்றது.


‘உலக நடப்புத் தெரியாதவனை கிணற்றுத் தவளை’ என்று கூறுவது வழக்கம்


இன்றைய செய்திகள் - 12.03.2025


* மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அனுமதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.


* விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


* உலகின் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்.


* சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதகால காத்திருப்புக்குப் பிறகு வரும் மார்ச் 16-ல்  விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர்.


* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: அரியானா, ஜார்கண்ட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


* சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்: சங்கக்காரா அபார சதம். இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி.


Today's Headlines


* Tamil Nadu Chief Minister Stalin has made a significant announcement for women's self-help groups, allowing them to transport their products free of cost on buses up to 100 kilometers. This move aims to support and empower women entrepreneurs in the state.


 * Heavy rain is expected in eight districts, including Virudhunagar and Sivaganga, as per the Chennai Weather Research Centre.


* India has been ranked fifth among the world's most polluted countries, according to a report by the Swiss air quality technology company.


 * Astronaut Sunita Williams and Barry Wilmore are set to return to Earth on March 16 after a nine-month stay at the International Space Station.


* The Indian senior women's hockey team has reached the finals of the National Senior Women's Hockey Championship, with Haryana and Jharkhand competing in the final


* Sri Lanka has defeated England in the International Masters League T20 series, with Sangakkara scoring a century




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...