Songs

Sunday, March 23, 2025

24-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

24-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

குறள் எண்:956

அதிகாரம்: குடிமை


சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாக அற்ற 

குலம்பற்றி வாழ்தும்என் பார்.


பொருள்:

நற்குடி ஒழுக்கத்திற்கேற்ப வாழ்வோம் என்போர், பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.


பழமொழி :

சூரியன் எழு முன் காரியம் ஆடு.   


Form your plans before sunrise.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல -- ஹென்றி போர்ட்


பொது அறிவு : 


1. இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?


பஞ்சாப்.


2.குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 21 நாட்கள்.


English words & meanings :


 Cave.   -     குகை

 

Coast.    -   கடற்கரை


நீதிக்கதை


 விருப்பப் பட்டியல்


பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தார். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிகளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினார் .


முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.


"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றார்  நெப்போலியன்.


அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.


மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடுசெய்வதாகக் கூறினார்.


மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் "தனக்கு திராட்சை  தோட்டம்வேண்டும்" என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னார் .


கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்றுகேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றார் .


அவன்  வெளியே வந்தவுடன், தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப்பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலைமதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்றுஏளனம் செய்தார்கள்.


அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார்.இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவர்  கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவருக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவரது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறார். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்வேலை செய்பவர்களுக்குததான் இந்த வேலைகளைக்கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின்முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்


மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.


யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர்  கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவர் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. 


ஆனால் நான் கேட்ட பரிசோஇப்போது என் கையில்"இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.


நீதி:அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது



இன்றைய செய்திகள் -;24.03.2025


* தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* தமிழகத்தில் இன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.


* கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு.


* தேசிய  மகளிர் ஹாக்கி போட்டி: 4-வது நாள் ஆட்டத்தில் ஒடிசா, ஹரியானா, மிசோரம், மத்திய பிரதேசம் அணிகள் வெற்றி.


* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்.


Today's Headlines


* Electricity board officials have stated that in Tamil Nadu, 'hybrid' power plants, combining wind and solar energy, will be established through public-private partnerships.


 * The Chennai Meteorological Department has forecast heavy rainfall in 8 districts of Tamil Nadu today, including Coimbatore and Erode.


 * India has expressed its opposition through diplomatic channels to China's illegal occupation of Ladakh and the creation of two districts, as stated by Minister of State for External Affairs Kirti Vardhan Singh in Parliament.


 * The US government has decided to deport 500,000 people from four countries, including Cuba.


 * National Women's Hockey Competition: Odisha, Haryana, Mizoram, and Madhya Pradesh teams won on the 4th day of the competition.


 * Miami Open Tennis Tournament: American player Coco Gauff advanced to the 4th round





 

Friday, March 21, 2025

22-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:952


ஒழுக்கமும் வாய்மையும் காணும்இம் மூன்றும்

 இழுக்கார் குடிப்பிறந் தார்.


பொருள்:

உயர்குடி பிறந்தார், ஒழுக்கம், உண்மை, மானத்திற்கு அஞ்சுதல் ஆகியவற்றில் நிலை தவற மாட்டார்கள்.


பழமொழி :

சிங்கத்துக்கு பங்கம் இல்லை.   


A lion knows no danger.


இரண்டொழுக்க பண்புகள் :   


*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    


*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.


பொன்மொழி :


எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ,எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் ---அறிஞர் அண்ணா


பொது அறிவு : 


1. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்


விடை:உத்திரப்பிரதேசம்.   


 2 நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?


விடை: அம்மோனியம் நைட்ரேட்


English words & meanings :


 Play.    -    நாடகம்


 Poem.      -    கவிதை


வேளாண்மையும் வாழ்வும் : 


 ஆசியாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதல் காரண மாக நகர்களின் எல்லை விரிவடைவதால் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன, நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.


நீதிக்கதை


 கை மேல் பலன் கிடைத்தது !


அரசன் ஒருவர்  சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கையை வைத்து தினமும் ஏதாவது ஒரு சகுனம் நல்லது என்று கூறி தனது புகழை நிலைநாட்டுவார். 


ஒரு நாள் இப்படித்தான்'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.


மன்னன் சேவகனை அழைத்தான்காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.


அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.


ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.


இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றார். 


அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.


சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். 


மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினார்.


சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான்மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன்கிடைத்து விட்டது அல்லவா?'என்றான்.


மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. தனது தவற்றை புரிந்து கொண்டார்.சேவகனை பாராட்டி அனுப்பினார்.



*இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.03.2025*


📰 சென்னையில் இன்று கூடுகிறது தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம். முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகையால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது தமிழ்நாடு.


📰 அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை ஒன்றிணைந்து முறியடிப்போம். சென்னை வந்துள்ள பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள் உறுதி.


📰 18-வது ஐ.பி.எல். போட்டிகள் கொல்கத்தாவில் இன்று கோலாகல தொடக்கம். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.


Today's Headlines | 22.03.2025*


📰 A joint action committee meeting against constituency realignment is being held in Chennai today. Tamil Nadu is attracting national attention with the arrival of Chief Ministers and party leaders.


📰 Let's unite to defeat the constituency realignment plan that is against basic democracy. Various state party leaders who have come to Chennai have confirmed their presence.


📰 The 18th IPL. The matches will start in Kolkata today with a bang. Spectacular performances will be organized at the Eden Gardens stadium in Kolkata.






Thursday, March 20, 2025

21-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.03-2025



திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:951


இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நானும் ஒருங்கு.


பொருள்: நல்குடியில் பிறந்தாரன்றி மற்றவரிடம் ஒழுக்கமும், பாவங்களுக்கு அஞ்சும் நாணமும் இயல்பாக அமைவதில்லை.


பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது. 


  When the meek are enraged, even a forest will not hold their wrath.


இரண்டொழுக்க பண்புகள் :   


*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    


*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.


பொன்மொழி :


கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ---தந்தை பெரியார்


பொது அறிவு : 


1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?


Snow White and seven dwarfs(1937)

2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?


 கெப்ளர்


English words & meanings :


 Movie    -      திரைப்படம்

 

 Music     -      இசை


வேளாண்மையும் வாழ்வும் : 


 பசுமைப் புரட்சிக் காலத்தில் உணவு உற்பத்தியின் பிரமாண்டமான வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக பாசன வசதிகளின் விரிவாக்கம் இருந்தது.


நீதிக்கதை


 குறையா நிறையா?


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு  நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.


குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.


"பானையே!நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்குமுன்னமே தெரியும். அதனால் தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"


இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக்கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.


இன்றைய செய்திகள்

21.03.2025

* 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

* ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ரஜாவத் வெற்றி.

Today's Headlines

* Municipal Administration Minister K.N. Nehru informed the Assembly that 375 non-agricultural village panchayats have been included in the 100-day employment scheme.

   * The High Court has ordered that online Patta applications should not be rejected without inquiring with the applicant.

   * The Election Commission has decided to link Voter ID cards with Aadhaar.
 
   * Miami Open Tennis Tournament: Russia's Anna Blinkova has advanced to the next round.

* Swiss Open Badminton Tournament: India's Rajawat won today's match


02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...