Songs

Thursday, March 20, 2025

21-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.03-2025



திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:951


இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நானும் ஒருங்கு.


பொருள்: நல்குடியில் பிறந்தாரன்றி மற்றவரிடம் ஒழுக்கமும், பாவங்களுக்கு அஞ்சும் நாணமும் இயல்பாக அமைவதில்லை.


பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது. 


  When the meek are enraged, even a forest will not hold their wrath.


இரண்டொழுக்க பண்புகள் :   


*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    


*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.


பொன்மொழி :


கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ---தந்தை பெரியார்


பொது அறிவு : 


1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?


Snow White and seven dwarfs(1937)

2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?


 கெப்ளர்


English words & meanings :


 Movie    -      திரைப்படம்

 

 Music     -      இசை


வேளாண்மையும் வாழ்வும் : 


 பசுமைப் புரட்சிக் காலத்தில் உணவு உற்பத்தியின் பிரமாண்டமான வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக பாசன வசதிகளின் விரிவாக்கம் இருந்தது.


நீதிக்கதை


 குறையா நிறையா?


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு  நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.


குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.


இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.


"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"


அதன் எஜமானன் கூறினான்.


"பானையே!நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்குமுன்னமே தெரியும். அதனால் தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"


இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக்கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.


இன்றைய செய்திகள்

21.03.2025

* 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

* ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ரஜாவத் வெற்றி.

Today's Headlines

* Municipal Administration Minister K.N. Nehru informed the Assembly that 375 non-agricultural village panchayats have been included in the 100-day employment scheme.

   * The High Court has ordered that online Patta applications should not be rejected without inquiring with the applicant.

   * The Election Commission has decided to link Voter ID cards with Aadhaar.
 
   * Miami Open Tennis Tournament: Russia's Anna Blinkova has advanced to the next round.

* Swiss Open Badminton Tournament: India's Rajawat won today's match


No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...