Songs

Tuesday, April 8, 2025

08-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: காலம் அறிதல்


குறள் எண்:483


அறுவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்?


பொருள் :(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?


பழமொழி :

Blessings are not valued till they are gone


நிழலின் அருமை வெயிலில் தெரியும்.


இரண்டொழுக்க பண்புகள் :  


*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும்  எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன். ‌‌


*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :


தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம். –ஜான் ஹெர்சி


பொது அறிவு : 


1. வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?


விடை: கந்தக அமிலம்


2. திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?


விடை: வேதாரண்யம்


English words & meanings :


 muddy-சேறு,


 sludge-கசடு


வேளாண்மையும் வாழ்வும் : 


ஆடி மாதம், ஆடிப் பெருக்கு என்றழைக்கப்படும், ஆடி 18க்குப் பிறகு விவசாயிகள், விவசாயம் செழிக்க விதைக்க தொடங்குவார்கள்.

நீதிக்கதை


 அழகு ஆபத்துக்கு உதவாது


ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. வயிறு முட்ட நீரை பருகியது.


அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.


சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.


மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை.


புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.


இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.


“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.


மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தன் கொம்புகளை 


மரக்கிளையிலிருந்து விடுவித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது.




Monday, April 7, 2025

07-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயற்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 இயல் :குடியியல்               

குறள் எண்:1006


 அதிகாரம் :நன்றிஇச் செல்வம்


ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.


பொருள்:


தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.


பழமொழி :

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்.


A teacher is better than two books.


இரண்டொழுக்க பண்புகள் :


* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 


* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.


பொன்மொழி :


உன் வேதனை  பலரைச்  சிரிக்க வைக்கலாம். ஆனால்,  உன் சிரிப்பு யாரையும்  வேதனைப்பட வைக்கக்கூடாது.----சார்லி  சாப்ளின்


பொது அறிவு : 


1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?    


விடை : பிங்கலி வெங்கையா.         


2. காற்றிலுள்ள நைட்ரஜனுக்கு பதிலாக ஆழ்கடலில் மூழ்குபவர்கள் சுவாசிக்க  பயன்படுத்தும் மந்த வாயு எது? 


விடை: ஹீலியம்


English words & meanings :


Aeroplane.    -   விமானம்


Bicycle.     -     மிதிவண்டி 


வேளாண்மையும் வாழ்வும் : 


 மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை துணி துவைக்க பயன்படுத்துங்கள்.


ஏப்ரல் 07


உலக நலவாழ்வு நாள்


உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.


நீதிக்கதை


 அபசகுனம்


அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள கடவுளின் படத்தை தான் பார்ப்பார்.


ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வந்தது. எல்லாம் சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் நடந்தது என்று,அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.


இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.


அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.


அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.


“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.


அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.


அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌


இன்றைய செய்திகள் - 07.04.2025


* தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


* 500 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்களின் வீடுகளில் சோலார் பேனல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு.


* நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.


* உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி.


* உலக குத்துச்சண்டை கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் ஹிதேஷ்.


* சார்லஸ்டன் டென்னிஸ் தொடர்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* This year's fishing ban in Tamil Nadu begins on the coming 15th. This ban will remain in effect for 61 days. Thus, the price of fish is expected to increase from next week.


* The Supreme Court has ordered the Tamil Nadu government to determine the minimum educational qualification for minority educational institute teachers.


* Solar Panel is a must in the homes of families who use 500 units. Kerala Government Announcement.


* India has provided 442 metric tonnes of food items to Myanmar affected by the earthquake.


* Russia's  missile attack on Ukraine. 18 people killed 


* World Boxing Cup: Hitesh set a historic record as the first Indian to advance to the final.


* Charleston Tennis Series: Jessica Begula Progress to the final.







Thursday, April 3, 2025

04-04-2025 பள்ளி காடு வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.04.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்             

அதிகாரம்: மானம்

குறள் எண்:964


தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.


பொருள்:

நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப் போல் இகழப்படுவர்.


பழமொழி :

தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும். 


  Having ascertained your own ability , display it in the assembly.


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.


* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :


தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.


வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்


------விவேகானந்தர்


பொது அறிவு : 


1. சைக்கிளில் அலுவலகம் செல்வதற்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?


 விடை : நெதர்லாந்து.  


2. வாழை மரத்தின் ஆயுட்காலம் என்ன?


 விடை :25 ஆண்டுகள்


English words & meanings :


 Path.   -    பாதை

Pond.     -    குளம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 இன்று உலக மக்கள் தொகையில் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிக்கதை


 நன்றி மறவாத புலி 


நெடு நாட்களுக்கு முன்பு அந்த காட்டில் இந்தப் புலி வசித்து வந்தது. ஒரு நாள் அது உறுமிக் கொண்டே நடந்து சென்றது. உறுமிக் கொண்டே செல்லும்போது, அது முள்ளின் மீது கால் வைத்தது, முள் குத்தியதில் வலியால் மிகவும் துடித்தது.


அது தானாகவே அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் புலியால் அந்த முள்ளை எடுக்க முடியவில்லை. அது வலி தாங்க முடியாமல் மிகவும் கத்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மனிதன் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தான். அவன் காதில் இந்த சத்தம் விழுந்தது.


“என்ன சத்தம் இது? ஏதோ ஒரு மிருகம் வலியால் துடித்துக் கொண்டிருப்பது போலிருக்கிறதே” என்று அந்த சத்தத்தை  கவனித்துக்கொண்டே புலி இருக்கும் இடத்திற்கு வந்தான்.


அந்தப் புலியை பார்த்து “அடக்கடவுளே! இது ஒரு புலி ஆச்சே..” என்று பயந்தான் இருந்தும் பாவம் பார்த்து அந்த புலிக்கு உதவ மனிதன் முன்வந்தான். மெதுவாக நடந்து அதன் அருகே சென்று அந்த முள்ளை புலியின் காலிலிருந்து எடுத்து விட்டான். புலி நன்றியோடு அந்த மனிதன் முகத்தில் நக்கிக் கொடுத்தது. அந்த மனிதனுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அதன் வழியே சென்றது.


சில நாட்களுக்குப் பிறகு, கொள்ளைக்காரர்கள் அந்த காட்டுக்குள் வந்து விலங்குகளை 


தூரத்தினர். அப்போது காட்டில் உள்ள வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்தன. அதில் புலி ஒன்றும் இருந்தது.


 மனிதன் ஒருவனைக் கண்ட புலி அந்த மனிதன் மீது பாயத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று நின்றுவிட்டது. அன்றைக்கு புலிக்கு உதவி செய்த அதே மனிதன் தான் அவர். வலிமையான அந்த புலி அந்த மனிதன் அருகே சென்று அவன் முகத்தில் நக்கிக் கொடுத்தது, அவரும் அந்த புலியை அன்புடன் அரவணைத்தார்.


இதைப் பார்த்துக் கொண்டிருந்த  கொள்ளைக்காரர்கள் அவர்கள் தவறை உணர்ந்தார்கள். அன்று முதல் புலியும் அந்த மனிதனும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.


நீதி : எந்த நல்ல செயல் செய்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்கும்.


இன்றைய செய்திகள் - 04.04.2025


* ரூ. 45 இலட்சத்தில் 

சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள் நிறுவப்படும் என தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் தகவல்.


* கோயம்புத்தூர் மாநகராட்சியில் செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 


* கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.


* அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


* தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றுள்ளார்.


* ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி.


Today's Headlines


* The Tamil Nadu Fisheries Development Corporation has announced that fish waste recycling plants will be established in Chennai, Ramanathapuram, and Thoothukudi at a cost of ₹4.5 million.

 

   * The construction of the Classical Tamil Park is undergoing within the Central Prison complex in Coimbatore  Corporation.

 

   * The Supreme Court has upheld the Calcutta High Court's order canceling the appointments of 25,753 individuals, stating that the West Bengal teacher recruitment in 2016 was illegal.

 

   * China has urged the United States to immediately withdraw the recently imposed tariffs and has stated that it will retaliate to protect its national interests.

 

   * Tamil Nadu's S.S. Madhunisha won 2 medals in the National Sub-Junior Archery Competition.

 

   * Bengaluru FC defeated Goa in the Indian Super League (ISL) football match




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...