பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2025 திருக்குறள் பால் : அறத்துப்பால் அதிகாரம்: பயனில சொல்லாமை குறள் எண்: 198 அரும்பயன் ஆயும் ஆறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். பொருள் : சொல்லுக்கு ஆற்றலுண்டு, பயனுண்டு என்று அறிந்த பெருமக்கள் நல்ல,உயர்ந்த பயன் தராத சொற்களைக் கூமாட்டார்கள். தம் மதிப்பைக் குன்றச் செய்யும் சொற்களை ஒரு போதும் கூறார் என்பது கருத்து." பழமொழி : கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு. The roots of education is bitter, but the fruits are sweet. இரண்டொழுக்க பண்புகள் : 1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் . பொன்மொழி : "சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும். இப்படிக்கு "" முயற்சி""." பொது அறிவு : 1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது? சிலப்பதிகாரம் . 2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? கேரளா English...