பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
நாள்: 11-12-24
இன்று
சர்வதேச மலைகள் தினம்.
கர்நாடக இசை கலைஞர் M.S. சுப்புலட்சுமி (2004) நினைவு தினம்.
பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்தவரும்,, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் புதிய ஆத்திசூடி போன்ற காவியங்களை படைத்த தேசிய கவி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882),
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (1935),
சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (1969) ஆகியோரின் பிறந்த தினம்
UNICEF DAY
திருக்குறள்
பால்:பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: கல்வி
குறள் எண்:393
கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்
பழமொழி
1.அக்கம் பக்கம் பார்த்து பேசு
2.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இரண்டொழுக்க பண்புகள்
நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்
துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்
பொன்மொழி
இலக்கை அடைவதில் மன உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்க்கமும் உங்களின் முன் தெளிவாக தெரியும்
பொது அறிவு
1.முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது
கோலாலம்பூர்
2.வேர் இல்லாத தாவரம் எது
காளான்
English words & meanings :
Linguistics -மொழியியல்
Philologist -மொழியியலாளர்
தமிழ் அகராதி
நசை-அன்பு, ஆசை, ஈரம், ஒழுக்கம், விருப்பம்
கணினி கலைச்சொற்கள்
Window-சாளரம்
Wizard-வழிகாட்டி
இலக்கணம் (Grammer)
Continuous
S+V+O
I was eating an apple- ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்
I am eating an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்
I shall be eating an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்
விவசாயம் -உணவு
பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்
நீதி கதை
மயில் மற்றும் காகம்
ஒரு மயில் மற்றும் காகம் வனத்தின் அருகில் வாழ்ந்தன. மயில் தனது அழகான வெண்ணிற இறக்கைகள் மற்றும் மஞ்சள் பச்சை வண்ணங்கள் கொண்ட உடலால் பெருமை பட்டது. காகம் அதன் கருமை நிறத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட உணர்ந்தது.
ஒரு நாள், காகம் மயிலிடம் சென்று, "நீ மிகவும் அழகானவளாக இருக்கிறாய். உன் இறகுகளால் அனைவரின் பார்வையும் ஈர்க்கிறது. ஆனால் என்னை பார்த்தால், என்னில் எதுவும் அழகாக இல்லை" என்று சோகத்துடன் கூறியது.
மயில் சிரித்து, காகத்திடம் சொன்னது:
"ஆமாம், என் இறகுகள் அழகாக இருக்கலாம். ஆனால் என் ஆற்றல் என் உடலின் வண்ணத்தில் இல்லை. நான் பறக்க விரும்பினால் முட்டாதியில் முடியும், ஆனால் நீ வானத்தில் உயரமாக பறக்க முடியும்."
அதை கேட்ட காகம் தனது ஆற்றலையும் தன்மையான திறன்களையும் உணர்ந்தது. அதன் பிறகு, காகம் எந்த கலங்கலும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தது.
கதை நெறி:
ஒவ்வொருவருக்கும் தன்னிடத்தில் தனித்தன்மை உள்ளது. பிறரைப் பார்த்து நட்பிழக்காமல், நம் தனித்தன்மையை அறிந்து வாழ வேண்டும்.
இன்றைய செய்திகள்
11-12-2024
No comments:
Post a Comment