Songs

Wednesday, December 11, 2024

12-12-24-காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


இன்று  


12-12-24  இன்று 

சர்வதேச கன உலோக தினம். 

சர்வதேச கரலாகட்டை தினம்.  

அஜுனா விருது பெற்ற, புகழ்பெற்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்,  பத்மஸ்ரீ யுவராஜ் சிங் (1981) பிறந்த தினம்.

திருக்குறள் 

பால்:பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: கல்வி 

குறள் எண்:394

 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.


 பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப் பழகி பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்


பழமொழி

Never blow hot and cold in the same breath

முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே. 


இரண்டொழுக்க பண்புகள் 

ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி 

வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், பலமுறை வென்ற மனிதன் ஆகிறான்.


பொது அறிவு

  • காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? ஒக்கேனக்கல்
  • உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு? இந்தியா

 

English words & meanings :

impassable – impossible to travel through or go through.the narrow channels are impassable to ocean-going ships. adjective. 
1. கடந்து செல்ல முடியாத

2. ஊடுருவிச் செல்ல முடியாத. பெயரடை


தமிழ் அகராதி

வயம்-என்ற சொல்லின் பொருள் 

ஆடு, நீர், பறவை ,பூமி ,ஏற்றது, கிராம்பு ,முயல்

கணினி கலைச்சொற்கள்

ஆல்கொரிதம் (Algorithm):

ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்க அல்லது ஒரு பணியை செய்ய வழிகாட்டும் விதிமுறைகளின் அடுக்கம்.
எ.கா: தேடல் இயந்திரத்தில் தகவலை பெறும் செயல்முறை.


2. தரவுத்தொகுப்பு (Database):

தகவல்களை சீரான முறையில் சேமித்து, நிர்வகிக்கும் அமைப்பு.
எ.கா: MySQL, MongoDB.

இலக்கணம் (Grammer)

Perfect

S+V+O 

 I had eaten an apple- ஆப்பிள் சாப்பிட்டு இருந்தேன்

I have eaten an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டு இருக்கிறேன்

I shall have eaten an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டு இருப்பேன்

விவசாயம் -உணவு

தக்காளியில் மற்ற உணவுகளை விட அதிகளவில் வைட்டமின் சி உள்ளன. இந்த வைட்டமின் சி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன. முக்கியமாக தக்காளியை ஒருவர் சமையலில் சேர்ப்பது மட்டுமின்றி, அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்


நீதி கதை 

குருவியும் கொக்கும்

ஒரு நாள் ஒரு குருவியும் கொக்கும் நதிக்கரையில் சந்தித்தன. குருவி, கொக்கின் நீண்ட கழுத்தையும் அழகிய தோற்றத்தையும் பார்த்து பொறாமைப்பட்டு சொன்னது:
"நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! நான் கூட உன் மாதிரியான நீண்ட கழுத்தை பெற்றிருந்தால் நன்றாக இருக்கும்."

அதற்கு கொக்கு புன்னகைத்துக் கூறியது:
"நீ பார்ப்பது ஒரு தோற்றமே. நீயே உன் சிறிய தோள்களைப் பார்த்தால், உனக்குள்ளே இருக்கும் விருப்பம், வேகத்துக்கும் அடையாளம். எல்லா உயிரினங்களுக்கும் தனித்தன்மை இருக்கிறது, அதை மதிக்க வேண்டும்."

குருவி அதை உணர்ந்து, தன் சிறியதன்மையை விரும்பக் கற்றுக் கொண்டது.

நீதி:
ஒவ்வொருவருக்கும் தனக்கே உரிய திறமையும் தனித்தன்மையும் இருக்கின்றன. அவற்றை மதிப்பதே நியாயம்.


இன்றைய செய்திகள் 

12.12.2024

🎷திண்டிவனத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிய டாபர் நிறுவனம். இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


🎷திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிப்பு.


🎷* நாளை (டிச.12) வைக்கம் போராட்டம் துவங்கிய தந்தை பெரியார் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் பங்கேற்கிறார்.


🎷* புதியதாக தினமும் 2 லட்சம் வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய அளவுக்கு பெங்களூருவில் மாபெரும் பறக்கும் பாலம் ஒன்று கட்டப்படவிருக்கிறது . இது பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* 🎷சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


*🎷உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஸ் உடனான ஆட்டத்தை 13வது சுற்றில் டிங் டிரா செய்தார்.


Today's Headlines


🎸* Dabur has started construction of a new factory in Tindivanam. This will provide employment to 750 people.


🎸* Announcement of a diversion route for heavy vehicles until the morning of the 15th in Tiruvannamalai on the occasion of the Karthigai Deepa festival.



* 🎸Tomorrow (Dec. 12), Vaikom will hold a protest to mark Father Periyar's centenary. The Chief Minister will participate!



🎸* A new giant flying bridge will be built in Bengaluru to accommodate 2 lakh vehicles daily. This is expected to help reduce traffic congestion in Bengaluru.



🎸* 7 planes are circling in the sky at Chennai airport, unable to land. Heavy rains accompanied by gale-force winds have affected flight services at Chennai airport.



* 🎸World chess championship: Ding holds Gukesh to draw in Game 13, retains advantage.


Thank you

www.waytoshines.com

No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...