முதல் வகுப்பு தமிழ் பாடம் பாடல்கள் கேட்க இங்கே கிளிக் செய்க
கண்ணாடி
மெத்தப் பெரிய கண்ணாடி வீட்டில் என்னிடம் இருக்கிறது நித்தம் நித்தம் அதன் முன்னால் நின்றே அழகு பார்த்திடுவேன்
எப்படி எப்படி செய்தாலும் என்போல் அதுவும் செய்திடுமே நன்மை செய்தால் நன்மை தான் நம்மை நாடி வந்திடுமே
-அழ.வள்ளியப்பா
என்ன வண்ணம் வேண்டும்?
வெள்ளை வண்ணம் வேணுமா? - அம்மா! வெண்ணெய் கொஞ்சம் அள்ளிக்கோட
கருப்பு வண்ணம் வேணுமா?- அம்மா! காக்கைக் குஞ்சிடம் வாங்கிக்கோ! பச்சை வண்ணம் வேணுமா?- அம்மா! கிளியைக் கண்டு பேசிக்கோ! நீல வண்ணம் வேணுமா? - அம்மா! நீயே கடலைப் பார்த்துக்கோ! சிவப்பு வண்ணம் வேணுமா? - அம்மா! செந்தாமரையைக் கேட்டுப்பார்! மஞ்சள் வண்ணம் வேணுமா? - அம்மா! வான நிலாவைத் தொட்டுக்கோ!
எல்லா வண்ணமும் வேணுமா? - அம்மா! என்னை இடுப்பில் எடுத்துக்கோ!
-ஈரோடு தமிழன்பன்
வண்ணத்துப்பூச்சி
தோட்டமெல்லாம் சுற்றிவரும் வண்ணத்துப்பூச்சி-உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டுமே வண்ணத்துப்பூச்சி.
பட்டுப்போலப் பளபளக்கும் வண்ணத்துப்பூச்சி பறக்கும் பூவைப் போலிருக்கும் வண்ணத்துப் பூச்சி.
சின்னப் பாப்பா கேட்கிறேனே வண்ணத்துப்பூச்சி-நீ திரும்பி என்னைப் பார்த்திடுவாய் வண்ணத்துப்பூச்சி.
பொம்மை
அம்மா தந்த பொம்மை
அழகழகு பொம்மை தலையை ஆட்டும் பொம்மை தஞ்சாவூரு பொம்மை
தாளம் தட்டும் பொம்மை தாவி ஓடும் பொம்மை நான் விரும்பும் பொம்மை நல்ல கரடிப் பொம்மை
No comments:
Post a Comment