இரண்டாம் வகுப்பு தமிழ் பாடல்களை கேட்க இங்கு கிளிக் செய்க
பூசணிக்காய் தலையிலே
பச்சை மிளகாய் மூக்குதான்!
திராட்சை இரண்டு கண்களாம்
தக்காளிப்பழ வாய்தானாம்
பரங்கிக்காய் உடம்பிலே
புடலை இரண்டு கைகளாம்
வெண்டைக் காய்கள் விரல்களாம் வெள்ளரிக்காய் கால்களாம்
காயும் பழமும் மனிதர்போல்
காண அழகு பாருங்கள் நடனம் ஆடப் போகிறார் நாமும் காண்போம் வாருங்கள்
யாரு? யாரு? யாரு?
கத்தரிக்காய்க்குக் குடைபிடிக்கக் கற்றுக்கொடுத்தது யாரு?
அந்தக் கடலைக்கொட்டையை முத்துச் சிப்பிபோல மூடிவச்சது யாரு?
பருத்திச்செடிக்குப் பஞ்சு மிட்டாயைத் தின்னக்கொடுத்தது யாரு?
அந்த வாசனையில்லாக் காகிதப் பூவுக்கு வண்ணமடிச்சது யாரு?
ஆலமரத்துக்கு அத்தனை ஊஞ்சலை ஆடக்கொடுத்தது யாரு?
அந்தத் தொட்டாச்சிணுங்கி பட்டுன்னு மூடிக்கக் கட்டளை போட்டது யாரு?
யாரு? யாரு?கூறு அந்த இயற்கை அன்னையாம் பாரு
-வையம்பட்டி முத்துசாம்
வண்ணம்தொட்டு வண்ணம் தொட்டு
படங்கள் வரையலாம் வானவில்லைத் தொட்டும் கொஞ்சம்
படங்கள் வரையலாம்
நீலம்தொட்டு நீலம்தொட்டு
கடலும் வரையலாம்
கடலலையில் கடலலையில்
கால்கள் நனைக்கலாம்
பச்சைதொட்டு பச்சைதொட்டு
மரங்கள் வரையலாம்
மரக்கிளையில் மரக்கிளையில் ஊஞ்சல் ஆடலாம்
சிவப்புதொட்டு சிவப்புதொட்டு
பூக்கள் வரையலாம்
பூக்கள்போல பூக்கள்போல
பூத்துச் சிரிக்கலாம்
No comments:
Post a Comment