திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: நட்பு ஆராய்தல்
குறள் எண்:797
ஊதியம் என்பது ஒருவற்க்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் .
பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
பழமொழி :
அழகு சோறு போடாது.
One cannot make soup out of beauty
இரண்டொழுக்க பண்புகள் :
*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.
*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.
பொன்மொழி :
நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே.-----ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
பொது அறிவு :
1. இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு
விடை: ஹீமேட்டாலஜி.
2. சுவாச மையம் எது?
விடை: முகுளம்
English words & meanings :
avarice-பணபேராசை,
greed-பேராசை
வேளாண்மையும் வாழ்வும் :
அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்
07-01-25 இன்று
கலிலியோ கலிலி ஜுபிடர் கோளின் துணைக் கோள்களை (1610) கண்டறிந்தார்.
வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்திற்கு (1894) காப்புரிமம் பெற்றார்.
இயற்கையில் கண்டறியக்கூடிய கடைசி தனிமமான ஃபேன்சியத்தை பெண் விஞ்ஞானி மார்க்ரேட் பெரே (1939) கண்டுபிடித்தார்.
நாசாவின் சேர்வெயர் 7 விண்கலம் விண்ணில் (1968) ஏவப்பட்டது.
இயந்திர பொறியாளரும் மின் பொறியாளருமான நிக்கோலா தெஸ்லா (1943) நினைவு தினம்.
ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்று வரை அறியப்படும் ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி (1943), அபிநய சரஸ்வதி பத்மபூஷன். சரோஜாதேவி (1938), தமிழுக்கு தொண்டாற்றிய சிவதமிழ்ச்செல்வி. தங்கம்மா அப்பாகுட்டி (1925) ஆகியோரின் பிறந்த தினம்.
நீதிக்கதை:
முட்டாளும் சிங்கமும்
ஒரு காலத்தில், ஒரு மிருககாட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அது மிகவும் பெருமையாக இருந்தது. "இந்த மிருககாட்டில் நான் தான் அரசன்," என்று நினைத்து மற்ற மிருகங்களைப் பிடித்து அழுத்தம் கொடுக்கும்.
ஒரு நாள், சிங்கம் தன்னுடைய ஆண்மையை எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. அது ஒரு குட்டி நதியின் அருகே போய் தன்னுடைய முகத்தை தண்ணீரில் பார்த்தது. தண்ணீரில் சிங்கத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது.
அது தன்னைப் பார்த்து: "இங்கே இன்னொரு சிங்கம் இருக்கிறது! அது என்னைவிட வலிமையானதாக இருக்க முடியாது," என்று நினைத்தது. அதை சந்திக்க சிங்கம் தண்ணீருக்குள் குதித்தது. ஆனால் அது வெறும் பிரதிபலிப்பாக இருந்தது என்பதை உணராமல், ஆழமான தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.
அதனால், பெரிய பேரிலிருந்து தப்பிக்க முடியாமல், சிங்கம் தண்ணீரில் மூழ்கி மறைந்தது.
நீதி:
மிகுந்த பெருமை ஒருவரின் முற்றிலும் நாசமாக முடிக்கலாம். எப்போதும் முன் நினைத்து செயல்பட வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள்
No comments:
Post a Comment