CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றால் என்னென்ன பண பலன் கிடைக்கும் ?..
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார் என வைத்துக் கொண்டால் அவர் பணிபுரிந்த காலத்தில் மாதா மாதம் செலுத்திய சிபிஎஸ் தொகைக்குண்டான வட்டியும் அதற்கு ஈடாக அரசு செலுத்தும் தொகைக்கு அதனுடைய வட்டியும் சேரும். தோராயமாக 24 லட்சங்கள்
அடுத்து SPF ரூ 20 மற்றும் ரூ 50 இதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை
அடுத்து ஈட்டிய விடுப்பு 240 நாட்கள். வைத்திருக்கிறீர்கள் என்றால்
அதற்கான கடைசி மாதத்தில் வாங்கிய சம்பளத்தில் 8 மாத சம்பளம்
அடுத்து சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு 180 நாட்கள்..
இதில் 90 (மூன்று மாத சம்பளம்) நாட்களுக்கு கடைசி மாத சம்பளத்திலிருந்து பணப்பலன் பெறலாம்
அடுத்து ஒரு ஆசிரியர் 60 வயது முடிந்து பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெறுகிறார் என்றால் அடுத்த மூன்று மாதத்திற்கு மறு நியமனம் பெறலாம் ....(குறிப்பு தங்கள் பணி புரியும் வட்டாரத்தில் ஆசிரியர் பணியிடங்கள் surplus ஆக இருக்கக் கூடாது
மேற்கண்ட பலன்களில் CPS ஐ GPF ஆக மாற்றி பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முக்கிய இலக்கு என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment