Songs

Thursday, February 13, 2025

14-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: தீ நட்பு

 குறள் எண்:815

 செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை

 எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்:காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்."

பழமொழி :

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.   

Where there is anger, there may be excellent qualities.

இரண்டொழுக்க பண்புகள் :  

  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  

*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.

பொன்மொழி :

நீ எதுவாக இருக்க விரும்புகிறாயோ அதற்கு அருகில் சென்று விட முனைந்து செயல்படு.-சாக்ரடீஸ்

பொது அறிவு : 

1. ஈராக் நாட்டின் தலைநகரம்?

விடை:பாக்தாக்

2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?

விடை:  பாரதிதாசன்

English words & meanings :

 Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. 

பெயர் சொல். both homonyms 

வேளாண்மையும் வாழவும் : 

"கையால் களையெடுப்பது

பூண்டு, லவங்க எண்ணெய், வெண்காரம்

சாப்பட்டு உப்பை தெளித்தல்"


நீதிக்கதை

மகிழ்ச்சி 

ஒரு ஊரில் ஒருவர் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். அதிக லாபம் இல்லை என்றாலும், தனது வாழ்க்கையை மகிழ்வுடன் நடத்தி வந்தார்.

அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தை பற்றிய ஒரு வதந்தி பரவிக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் பொழுது,நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட அவர், உடனே தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, மறுநாள் காலையில் புதையலை எடுக்க  பாலைவனத்தை நோக்கிச்

சென்றார்.மலையை நோக்கி நின்று தனது நிழல் விழும் இடத்தில் தோண்ட ஆரம்பித்தார்.

அதுவரை வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர் தற்போது  புதையலை எடுக்க காலையிலிருந்து நிழல் விழும் இடத்திலிருந்து தோண்டினார்.  மாலையாகும்போது நிழல் அவரது காலடிக்குள் வந்து விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த அவர் அழுது புலம்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர் அவரிடம் "உன்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றைத்  தேடினால் துயரம் தான் ஏற்படும்" என்று கூறினார்.

நீதி:  இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வதே, வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல். 

இன்றைய செய்திகள் - 14.02.2025


* 800 ஆண்டு தொன்மையான 3 பாண்டியர் கால கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறையினர் 5 மணி நேரம் ஆய்வு செய்தனர்.


* அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை தொகுப்பது குறித்து பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் தமிழக அரசு அலுவலர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு பயிற்சி.


* பிரம்மபுத்திராவில் சீனாவின் மெகா அணை திட்டம்: தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தகவல்.


* இந்தியா, பிரான்ஸ் இணைந்து ஏஐ ஆராய்ச்சி: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சந்திப்பில் முடிவு.


* ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் போட்டி: இந்தியா காலிறுதிக்கு தகுதி.


* ஒருநாள் கிரிக்கெட்: முதல் 50 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார் இந்திய வீரர் சுப்மன் கில்.


Today's Headlines


* Central Archaeological Survey of India (CSA) conducted a 5-hour study of 3 800-year-old Pandya-era inscriptions.


* 4-day special training for Tamil Nadu government officials at IIM Bangalore on compiling data required for government projects.


* China's mega dam project on Brahmaputra: Central government informed that it is actively monitoring it.


* India, France to jointly conduct AI research: Decision reached in meeting of Prime Minister Modi and French President Macron.


* Asian Mixed Teams Badminton Tournament: India qualifies for quarterfinals.


* One-day cricket: Indian player Shubman Gill sets world record for most runs scored in first 50 matches







No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...