Songs

Thursday, February 20, 2025

21-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்: 819 மட்ட


 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.


பொருள்:

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும்  உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் களவிலும் துன்பம் தருவதாகும்."


பழமொழி :

சத்துருக்களையும் சித்தமாய் நேசி.


  Love even your enemies heartily.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  


*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.


பொன்மொழி :


முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல,  நீ நினைத்ததை முடிக்கும் வரை.


பொது அறிவு : 


1. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்


   விடை: பெரம்பூர்

             

 2.தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம் 


விடை:  நெய்வேலி 


English words & meanings :


 Energetic. -   துடிப்புள்ள,

Envy.    -     பொறாமை


வேளாண்மையும் வாழ்வும் : 


மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவரங்களையும் நட்டு அவற்றின் மூலம் நோயைக் கட்டுப் படுத்தலாம்.


நீதிக்கதை


 நமது எண்ணம் 


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்  குடிக்க தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்குச் சென்றார் .


தாகத்தினால் உயிர் போய்விடுமோ என்று  நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போன்ற வீடு இருப்பதை கண்டார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த இடத்திற்கு சென்று விட்டார்.


அங்கே கையால் அடிக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருந்தது. அருகே இருந்த சிறிய அட்டையில் யாரோ எதையோ எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர் படித்துப் பார்த்தார். அதில், குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.குடித்துவிட்டு மீண்டும் குவளையில் நீரை நிரப்பி வைத்து செல்லவும் என்று எழுதி இருந்தது.


அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா? அதிலிருந்து தண்ணீர் வருமா? என்று சந்தேகமாக இருந்தது.


அந்தப் பம்பு இயங்காவிட்டால் இந்த தண்ணீர் வீணாகி விடுமே என்றும் அவர் மனதில் நினைத்தார்.


அதுக்கு பதிலாக இந்த தண்ணீரை நாம் குடித்து விட்டால் தாகமும் தீரும். உயிர்பிழைக்கவும் உத்தரவாதம் உண்டு.அவன் யோசித்தான். தண்ணீரை குடித்து விடுவது புத்திசாலித்தனம் என்று ஒரு கணம் நினைத்தாலும், ஒருவேளை அதில் எழுதி இருந்ததைப் போல இந்த பம்ப் இயங்கும் நிலையில் இருந்து,  பம்ப் இயங்க தேவையான இந்த தண்ணீரை குடித்து விட்டால் இனி நம்மை போல தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.


அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்த குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டினுள் ஊற்றி அடிக்க ஆரம்பித்தார். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு அந்த குவளையையும்  நீரால் நிரப்பி வைத்த போது அவரது மனம் நிறைந்து இருந்தது.


 நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல் பயன்படும்படி விட்டுச் செல்ல வேண்டும்.எந்த நன்மையும் நம்முடன் நின்று போக விடக்கூடாது.



இன்றைய செய்திகள் - 21.02.2025


* தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.


* தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


* விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


* ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மார்ச் 12-ம் தேதி பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக்  ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 8 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்புகின்றனர். அவர்கள் மார்ச் 19-ம் தேதி அங்கிருந்து பூமிக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


* புரோ ஹாக்கி லீக்: நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி.


* தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்.


Today's Headlines


* Tamil Nadu's budget is set to be approved on February 25, with Chief Minister M.K. Stalin leading the cabinet meeting at the Secretariat in Chennai. This meeting is crucial as it will finalize the state's budget, outlining its financial plans and allocations for the upcoming year.


* In other news, Chennai's temperature is expected to rise by 4 degrees Celsius above normal until February 23, according to the Chennai Meteorological Centre.


* ISRO has successfully developed the world's largest vertical rocket stage, weighing 10 tons, marking a significant milestone in India's space program.


*  The Space X Dragon spacecraft is scheduled to launch on March 12 and will dock at the International Space Station. Astronauts Sunita Williams and Butch Wilmore will return to Earth on March 19 after an eight-month mission.


* In sports, India defeated Germany in the Pro Hockey League, while Tamil Nadu won six gold medals in the National Para Athletics Championship.




No comments:

Post a Comment

02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...