பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17-03.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண்:947
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.
பொருள்: செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.
பழமொழி :
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.
Authority shows the man
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
இளமையில் கல்வியை புறக்கனித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இழந்தவன் ஆகிறான்
பொது அறிவு :
1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது?
ஆர்க்டிக் என்னும் கடற்பறவை.
2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ?
சொர்க்கப் பறவை.
English words & meanings :
Martial arts. - தற்காப்புக் கலை
Running. - ஓடுதல்
வேளாண்மையும் வாழ்வும் :
நிலத்தடி நீரை எடுத்து உபயோகப் படுத்திய அளவுக்கு நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக செலவழிக்க முன்வரவில்லை. விளைவு உலக அளவில் பரவலாக நீர் தட்டுப் பாரடு ஏற்பட்டது
நீதிக்கதை
ஒரு ரூபாய்
முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு ரூபாய் காசு கீழே கிடந்தது. அவர் அந்த ரூபாயை ஒரு ஏழைக்கு கொடுக்க நினைத்தார்.
அவர் போகும் வழியில் அவரால் எந்த ஏழையையுமே பார்க்க முடியவில்லை . அதனால் அந்த ரூபாயை அவரே பத்திரமாக வைத்துக்கொண்டார். அப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. ஒருநாள் முனிவர், அவரது வீட்டை விட்டு வெளியே வரும் போது ஒரு ராஜா பேராசையோடு ராணுவத்துடன் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த ராஜா முனிவரை பார்த்ததும் தான் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போவதாகக் கூறி அவரிடம் தான் வெற்றி பெற ஆசீர்வாதம் கேட்டார். ராஜா அவ்வாறு கேட்ட பின் முனிவர் சிறிது நேரம் யோசித்து, ராஜாவுக்கு அந்த ஒரு ரூபாயை கொடுத்தார்.
உடனே ராஜாவுக்குக் கோபம் வந்தது. ராஜா முனிவரை பார்த்து “எனக்கு எதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார். முனிவர் “நான் நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் இந்த ஒரு ரூபாயை பார்த்தேன். இதை ஒரு ஏழைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் ஒரு ஏழையைக் கூட இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக கண்டுபிடித்துவிட்டேன்" என்றார்.
அதற்கு ராஜா “நான் பணக்காரன் என்னிடம் நிறைய பணமும், நிலங்களும் இருக்கிறது . ஆனால் நீங்கள் என்னை ஏன் ஏழை என்று கூறினீர்?” என்று கேட்டார்.
அப்போது முனிவர் “உன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், பேராசையுடன் இன்னொரு நாட்டை கைப்பற்ற போகிறாய்.
உன்னை விட ஒரு ஏழையை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் உனக்கு இந்த ஒரு ரூபாயை கொடுத்தேன்” என்றார்.
ராஜா தன்னுடைய தவறை உணர்ந்து தான் பேராசை மனதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு முனிவரிடம் மன்னிப்பு கேட்டார்
ன்றைய செய்திகள்
No comments:
Post a Comment