Songs

Tuesday, February 4, 2025

05-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:808


 கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

 நாள்இழுக்கம் நட்டார் செயின்.


பொருள்:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும்

 உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்."


பழமொழி :

கருணை உள்ளமே கடவுள் வாழும் அமைதி இல்லம்.   


Where mercy lives that mind itself where GOD lives peacefully.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :


நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. --ஹார்வி மேக்கே


பொது அறிவு : 


"1. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் என்ன?


விடை: வேலைவாய்ப்பை உருவாக்குவது.       


  2.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது?


விடை:  இந்திராகாந்தி"


English words & meanings :


Clove-கிராம்பு,


Coriander-கொத்துமல்லி


வேளாண்மையும் வாழ்வும் : 


உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)


நீதிக்கதை


 இரண்டு மரங்கள்! 


ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது."மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?"


என்றது.


முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.


குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். 


அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" என்றது.


அதற்கு மரம் கூறிய பதில் 'எனக்கு தெரியும் நான் வழுவடைந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு'என்றது.


நீதி :உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை கேளுங்கள்


இன்றைய செய்திகள் - 05.02.2025


* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


* புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.


* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்.


* சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.


* தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்.


* சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி.


Today's Headlines


* Chief Minister Stalin has said that the "Environment Club" will be created in all schools in Tamil Nadu. Soon a pilicey will be declared for the Environmental Education.


* In order to help with cancer research work, Chennai IIT has released for the first time in the country a cancer gene map.


* Rs.6,626 crore has been allotted for the Railway Projects which are going to be done at Tamil Nadu 


* The number of Indian workers working in Saudi Arabia has risen by two lakhs in the last financial year.


* National Sports Tournament: Tamil Nadu player won gold in the squash competition.


* Chennai Open Tennis: Italian player won in the first round



Monday, February 3, 2025

04-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:806


 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

 தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


பொருள்:உரிமைவாழ்வின் எல்லையில்

 நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்."


பழமொழி :

தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.   


 Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :


"உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்."


பொது அறிவு : 


1. கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது?


விடை: சோடியம்      


 2. . கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்?


விடை: மஞ்சள்


English words & meanings :


Cinnamon-இலவங்க பட்டை,


Clove-கிராம்பு 


வேளாண்மையும் வாழ்வும் : 


நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)


நீதிக்கதை


ஒரு மாபெரும் கூட்டம்.புகழ் பெற்ற இரண்டு பேச்சாளர்கள் இடையே போட்டி யாருடைய பேச்சுக்கு அதிக கைத்தட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு.


 கூட்டம் துவங்குவதற்கு முன் இரு பேச்சாளர்களும் ஒரு அறையில் அமர்ந்து அந்தக் கூட்டத்தை பற்றி  பேசிக்கொண்டிருந்தனர்.


அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வரவே அவர் எழுந்து பேசிக்கொண்டே வெளியில் சென்றார் ஆனால் அவர் எழுதிய அன்றைய பேச்சுக்கான குறிப்புகளை மேஜை மேலே மறந்து விட்டு சென்றார்.


 அப்போது அமர்ந்திருந்த மற்றொரு பேச்சாளர் அந்த குறிப்புகளை எடுத்துப் பார்த்தார். அவர் தயாரித்த குறிப்புகளை விட அந்த குறிப்புகள் மிகவும் அருமையாக இருந்தது.


கூட்டம் துவங்கியது.குறிப்புகளை எடுத்துக் கொண்டவர்க்கே முதலில் பேச வாய்ப்பு அமைந்தது. அவரும் தன்னுடைய  குறிப்புகளை விட்டுவிட்டு   எதிர்ப்பேச்சாளர் பேச வைத்திருந்த குறிப்புகளையே தன்னுடைய குறிப்புகள் போல மிகவும் அற்புதமாக பேசி முடித்தார்.


எதிர் பேச்சாளருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. அடுத்து அவர் பேச வேண்டும். அவர் என்ன பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை. மெதுவாக எழுந்து சென்று, மைக்கை பிடித்து, "முதலில் எனக்கு முன்னால் பேசியவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு தொண்டை கட்டு என்னால் சரியாக பேச முடியாது. எனது உரையை நீங்கள் வாசிக்க முடியுமா? என்று கூட்டம் துவங்குவதற்கு முன் கேட்டேன். அவர் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்" என்று  கூட்டத்தை பார்த்து கூறி அமர்ந்தார்.


நீதி :  சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவன் தான் புத்திசாலி 


இன்றைய செய்திகள் - 04.02.2025


* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.


* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.


* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.


* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.


Today's Headlines


* The  High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.


* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.


* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.


* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.


* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.




2024-25 ஆண்டில் செலுத்திய வருமான வரி- 11 மாத சம்பளத்தை பார்ப்பது எப்படி

Please click this link 

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.

ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Sunday, February 2, 2025

03-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :நட்பு

குறள் எண்: 818


ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.

பொருள்: தம்மால் முடியக்கூடிய செயலையும், முடிக்க முடியாதபடி கெடுப்பவரின் நட்பை, அவர் அறியும்படி எதுவும் சொல்லாமலே தளரச் செய்து கை விடுதல் வேண்டும்."


பழமொழி :

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.    


A car without a linch-pin will not move even three spans.


இரண்டொழுக்க பண்புகள் :  


 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.


* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.


பொன்மொழி :


நடக்கும் முன்னே.. நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்,நடந்த பின்னே ... நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.


பொது அறிவு : 


"1.கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் எது?


விடை: ஆந்த்ராக்ஸ்.      


 2. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?


விடை: சுரதா


English words & meanings :


 Asafoetida-பெருங்காயம்,


 Basil-துளசி


வேளாண்மையும் வாழ்வும் : 


வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் மரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.


நீதிக்கதை


 ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நீரால் நிரம்பியது. ஏரியின் குளிர்ச்சியை தாங்க முடியாத தவளை ஒன்று, மழை நின்றவுடன் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்குமே என நினைத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தது.


 பல காலமாக அந்த கிணற்றில் வாழ்ந்து வந்த மற்றொரு தவளை இந்த புதிய தவளையை வரவேற்றது. மேலும்,பொந்தில்  சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை எடுத்து புதிய  தவளைக்கு கொடுத்து மகிழ்ந்தது.


 கிணற்றில் இருந்த மற்ற தவளைகளுக்கு புதியதாக வந்த தவளையை பிடிக்கவில்லை.


இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்பொழுது கிணத்து தவளை ஏரி தவளையிடம், "நண்பனே! இத்தனை நாள் நீ எங்கே தங்கி இருந்தாய்?" என்று கேட்டது.


அதற்கு புதிய தவளை,  நான் ஏரியில் தங்கி இருந்தேன் அங்கு  மீன், முதலை,ஆமை போன்றவை வாழ்கின்றன. ஏரி இந்த கிணற்றை விட மிகப்பெரியதாக இருக்கும்" என்று கூறியது.


 அதற்கு அந்த கிணற்றுத் தவளை மிகவும் கோபத்துடன் "நண்பா நீ பொய் சொல்கிறாய். இந்த கிணற்றை விட மிகப்பெரிய நீர் நிலை இந்த உலகத்திலேயே இல்லை  என்று கூறியது.ஏரி தவளை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.


எல்லா கிணற்றுத் தவளைகளும் ஏரி தவளையை பார்த்து," நீ பொய்யன். நீ பொய் சொல்கிறாய் கிணற்றை விட பெரிய நீர் நிலை உலகில் எதுவும் இல்லை என்று  ஒரு சேர சத்தமிட்டன.


அப்போது ஒரு பெண்மணி தண்ணீரை எடுப்பதற்காக வாழியை கிணற்றுக்குள் இறக்கினார். அந்த வாளிக்குள் ஏறி  கிணற்றில் இருந்து வெளியே வந்தது ஏரி தவளை, 


குளிர்ச்சியான தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏரியை நோக்கி சென்றது.

நீதி: முட்டாள்களுடன் இருப்பதை விட தனியே இருப்பதே சிறந்தது


இன்றைய செய்திகள்

03.02.2025

* தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

* விடுமுறை நாளில் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படவில்லை.

* மாலத்​தீவு​களுக்கு நிதி​யுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதி​யாண்​டில் வழங்​க​வுள்​ளது.

* முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்

* ஹாக்கி இந்தியா லீக்: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன்.

Today's Headlines

* The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20: Chief Minister Stalin is proud that it is the highest in India.

* The registration offices were not functional today, the Sunday, as the land registry department employees did not go to work in protest against working on a holiday.

* India will provide Rs. 600 crore as financial assistance to the Maldives in the coming financial year.

* Vyacheslav Volodin, the chairman of the State Duma, the lower house of the Russian parliament, has said that he will go to India for important negotiations.

* Hockey India League: Sarachi RAR Bengal Tigers team is the champion.





02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...