பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02-2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண்:811
பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
பொருள்:அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின்
நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
பழமொழி :
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
Distance lends enchantment to the view
இரண்டொழுக்க பண்புகள் :
*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.
* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.
பொன்மொழி :
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. - சுப்பிரமணிய பாரதியார்
பொது அறிவு :
1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
விடை: சோனார்.
2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
விடை : நீர் ஆற்றல்
English words & meanings :
Ginger-இஞ்சி,
Cardamom-ஏலக்காய்
வேளாண்மையும் வாழ்வும் :
பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிரும் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள தழைச் சத்தை மண்ணில் அதிகரிக்கும்.
நீதிக்கதை
ரகசியம்
ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அந்த துறவிக்கு யார் என்ன அவமானப்படுத்தினாலும் கோபமே வராது. அவருடைய சிஷ்யருக்கு அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார்.
ஒருநாள் குருவிடம் சென்று, குருவே! யார் என்ன அவமானப்படுத்தினாலும் தங்களுக்கு கோபமே வருவதில்லையே ஏன்? அந்த ரகசியம் என்ன என்னிடம் கூறுங்கள்" என்று கேட்டார்.
அதற்கு குரு, " ஏரியில் உள்ள காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம்.ஒரு நாள் அவ்வாறு தியானம் செய்யும்பொழுது என்னுடைய படகை மற்றொரு படகு வந்து முட்டியது.
இப்படி யார் அஜாக்கிரதையாக வந்து முட்டியது? என்று மிகவும் கோபத்துடன் கண்களைத் திறந்து பார்த்தால், அது வெற்று படகு. காற்றினால் அசைந்து அசைந்து வந்து என்னுடைய படகின் மீது முட்டி இருக்கிறது.என் கோபத்தினை அந்த வெற்று படகின் மீது காட்டி என்ன பயன்?
அதுபோல் தற்போது என்னை யாராவது கோபப்படுத்தினால் அந்த வெற்றுப் படகின் ஞாபகம் தான் எனக்கு வரும்.இதுவும் வெற்று படகு தான் என்று அமைதியாக இருந்து விடுவேன்". என்று தனது ரகசியத்தை விளக்கிக் கூறினார்.
இன்றைய செய்திகள்
10.02.2025
* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.
* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.
* தேசிய விளையாட்டுப் போட்டி: போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.
Today's News
10.02.2025
* 800-year-old Pandya-era inscriptions have been discovered on a hillside near Madurai.
* Transport officials have said that steps are being taken to provide bus passes to 35.12 lakh students in the coming academic year.
* ISRO successfully conducted tests of the CE20 cryogenic engine used for the Gaganyaan project at the test center in Mahendrigiri.
* ISL. Football: Chennai FC team won by defeating East Bengal.
* National Games: Tamil Nadu athlete Pavithra won gold in the pole vault competition.